Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பால்கனி".. ரெய்னா குறித்து பழசை கிளறிய சேவாக்.. எல்லா நல்லா போகும்போது.. இப்படி பேசலாமா சார்?

சென்னை: டெல்லிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய ரெய்னா குறித்து முன்னாள் வீரர் சேவாக் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று டெல்லிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் ரெய்னா கம்பேக் கொடுத்தார். கிட்டத்தட்ட 700 நாட்களுக்கு பின் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் கம்பேக் கொடுத்துள்ளார்.

கடந்த சீசனில் குடும்ப விஷயங்களை காரணம் காட்டி இவர் ஐபிஎல்லை புறக்கணித்தார். குடும்ப உறுப்பினர்கள் சிலர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் இவர் இந்தியா திரும்பினார்.

இந்தியா வந்தார்

இந்தியா வந்தார்

அதே சமயம் இவருக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் மோதல் என்றும் கூறப்பட்டது. ரெய்னா பால்கனி உள்ள அறையை கேட்டார். இதை ஒதுக்காத காரணத்தால் அவர் இந்தியா கிளம்பி வந்தார் என்று கூறப்பட்டது. பால்கனிதான் இந்த மோதலுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

தோனி

தோனி

இந்த நிலையில் தற்போது ரெய்னா கம்பேக் கொடுத்துள்ளார். நேற்று அதிரடியாக ஆடிய ரெய்னா வெறும் 36 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம். இரண்டு வருடமாக கிரிக்கெட் ஆடவில்லை என்றாலும் நேற்று ரெய்னா தரமான கம்பேக்கை சர்வதேச போட்டிகளில் கொடுத்தார். சிஎஸ்கேவிற்கு மீண்டும் அதன் குட்டி தல திரும்பி வந்துள்ளார்.

கம்பேக்

கம்பேக்

ரெய்னாவின் இந்த கம்பேக்கை பலரும் கொண்டாடி வரும் நிலையில் சேவாக் மட்டும் குதர்க்கமாக ட்வீ ட் செய்துள்ளார். நேற்று சேவாக் செய்த ட்வீ ட்டில்.. ஜெய் ஜெய் பால்கனி.. இதுதான் வித்தியாசம் என்று குறிப்பிட்டுள்ளார். இதை காமெடியாக பார்க்கவும் சீரியசாக எடுக்க வேண்டாம் என்று சேவாக் கூறியுள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அதாவது ரெய்னா வந்ததுதான் சிஎஸ்கேவில் நடந்த மாற்றம்.. ஜெய் பால்கனி என்று கிண்டலாக ரெய்னாவின் வருகையை சேவாக் கிண்டலடித்துள்ளார். ரெய்னா மீண்டும் பார்மிற்கு திரும்பியதை பலரும் கொண்டாடும் நிலையில் சேவாக் மட்டும் அதை கிண்டல் செய்துள்ளார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் இதை விரும்பவில்லை. சேவாக் இப்படி பழைய விஷயங்களை கிளற கூடாது.என்ன நடந்தது என்று தெரியாமல் சேவாக் பழைய விஷயங்கள் பற்றி பேச கூடாது என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Story first published: Sunday, April 11, 2021, 15:06 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+