இவரை போய் எதுக்கு எடுத்தீங்க? சிஎஸ்கேவில் இணைகிறார் புதிய ஆஸி. வீரர்.. திடீர்ன்னு தோனி எடுத்த முடிவு
சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹஸல்வுட்டுக்கு பதிலாக புதிய மாற்று வீரரை சிஎஸ்கே எடுத்துள்ளது.
2021 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் மும்பைக்கும் பெங்களூருக்கும் இடையில் இன்று நடக்கிறது. நாளை சென்னைக்கும் டெல்லிக்கும் இடையிலான போட்டி நடக்க உள்ளது.
இதற்காக மும்பையில் சிஎஸ்கே அணி பயிற்சி செய்து வரும் நிலையில், இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக சிஎஸ்கே வீரர் ஜோஸ் ஹஸல்வுட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் திடீரென ஐபிஎல் போட்டிக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்பி உள்ளார்.

டாட்டா
ஹஸல்வுட் விலகியதற்கான உண்மையான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், கொரோனா விதிகளை காரணம் காட்டி அவர் விலகி இருக்கலாம் என்கிறார்கள். பயோ பபுளில் இருக்க விரும்பாமல் அவர் வெளியேறி இருக்கலாம் என்கிறார்கள். அணியில் இருந்தாலும் கூட சிஎஸ்கேவில் இவருக்கு ஆட வாய்ப்பு கிடைக்காது. பெரும்பாலும் இவர் ஆடும் அணியில் எடுக்கப்பட மாட்டார்.

வாய்ப்பு
இதனால் வாய்ப்பு கிடைக்காத தொடரில் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று ஹஸல்வுட் வெளியேறிவிட்டார் என்கிறார்கள். இந்த நிலையில் ஹஸல்வுட்டுக்கு மாற்றாக புதிய வெளிநாட்டு பாஸ்ட் பவுலரை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருந்தது. இதற்காக சில வெளிநாட்டு பவுலர்களிடம் சிஎஸ்கே பேசி பார்த்தது. ஆஸ்திரேலியாவின் பில்லி ஸ்டான்லேக், இங்கிலாந்தின் ரேஸ் டோப்லி ஆகியோரை சிஎஸ்கே தொடர்பு கொண்டுள்ளது.

ஆனால்
இவர்கள் இருவருக்கும் சிஎஸ்கே நிர்வாகம் சார்பாக போன் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வளவு கோடி தருகிறோம், வந்து விளையாட முடியுமா என்று கேட்டுள்ளனர். ஆனால் இவர்கள் சிஎஸ்கே அணிக்கு வர முடியாது, ஐபிஎல் தொடரில் ஆட முடியாது என்று அறிவித்துவிட்டனர். இவர்கள் சிஎஸ்கேவின் அழைப்பை ஏற்கவில்லை. இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவின் ஜேசன் பேரன்டிராப் சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.

ஜேசன் பேரன்டிராப்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாஸ்ட் பவுலரான ஜேசன் பேரன்டிராப் சிஎஸ்கே அணியால் ஹஸல்வுட்டுக்கு மாற்று வீரராக எடுக்கப்பட்டு இருக்கிறார். முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆவார் இவர். மும்பை அணியில் 2019ல் வெறும் 5 போட்டி மட்டுமே ஆடினார் . 2020ல் இவர் ஆடவில்லை. பெரிய அளவில் ஐபிஎல் ரெக்கார்ட் இவரிடம் இல்லை. சர்வதேச அளவிலும் இவர் பெரிய "கை" எல்லாம் இல்லை.

பெரிய கை
சர்வதேச அளவில் மொத்தமாக 7 டி 20 போட்டிதான் ஆடி உள்ளார். இவர் ஆடிய சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 28 விக்கெட்தான் எடுத்துள்ளார். பெரிய அளவில் இவர் சாதனைகள் எதையும் செய்தது இல்லை.

சாதனை
கடந்த சில வருடமாக சர்வதேச போட்டிகளிலும் இவர் ஆடவில்லை. இப்படி இருக்கும் போது இவரை போய் அணியில் எடுத்தது ஏன், சரியான பார்மில் இல்லாத போது ஹஸல்வுட்டுக்கு மாற்றாக ஜேசன் பேரன்டிராப்பை சிஎஸ்கே எடுத்தது ஏன் என்று கேள்வி எழுந்தது. தோனியின் இந்த முடிவு கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications