Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதனாலதான் "பிட்னஸ்" டெஸ்ட்ல தோத்தீங்க.. சிஎஸ்கே போட்டியில் ஷாக் சம்பவம்.. சிக்கலில் தமிழக வீரர்!

சென்னை: கேகேஆர் அணியை சேர்ந்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி நேற்று சிஎஸ்கேவிற்கு எதிராக ஆடிய விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Recommended Video

IPL 2021: மிதப்பில் இருந்த CSK வீரர்கள்.. ஒரேடியாக ஒரேயடியாக விளாசிய Dhoni.. என்ன காரணம்?

கொல்கத்தா அணியில் ஆடி வரும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் கொல்கத்தா அணிக்கு முக்கியமான விக்கெட்டுகளை வருண் சக்ரவர்த்திதான் எடுத்து வருகிறார்.

கடந்த வருடம் இவர் சிறப்பாக ஆடிய நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தேர்வானார். ஆனால் காயம் காரணமாக ஆட முடியவில்லை.

பிட்னஸ்

பிட்னஸ்

அதன்பின் இங்கிலாந்து தொடருக்கும் வருண் தேர்வானார். ஆனால் பிட்னஸ் டெஸ்டில் இவர் பெங்களூரில் தோல்வி அடைந்தார். யோ யோ டெஸ்டில் ஓட முடியாமல் இவர் தோல்வியை தழுவினார். இதன் காரணமாக இந்திய அணியில் இவருக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மீண்டும்

மீண்டும்

இந்திய அணியில் ஆட பிட்டாக இருக்க வேண்டும். நன்றாக ஆடினால் மட்டும் வாய்ப்பு கிடைக்காது. வேகமாக ஓடுவது தொடங்கி பீல்டிங் வரை அனைத்திலும் பிட்டாக இருக்க வேண்டும் என்று கோலியே வருண் சக்ரவர்த்தி குறித்து விமர்சிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது.

நிலைமை

நிலைமை

இந்த நிலையில்தான் நேற்று வேகமாக ஓட முடியாமல் வருண் ரன் அவுட் ஆனது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் வருண் ரன் அவுட் ஆனார். வேகமாக ஓட முடியாமல், மைதானத்தில் இவர் ஜாக்கிங் செய்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

ஸ்லோ

ஸ்லோ

மிக மெதுவாக இவர் ஓடியதை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். வருண் நல்ல பவுலர், ஆனால் அவர் இன்னும் கொஞ்சம் பிட்னஸ் மீது கவனம் செலுத்த வேண்டும். இந்த வேகத்தில் எல்லாம் ஓடினால் கண்டிப்பாக இந்திய அணியில் வாய்ப்பு பெற முடியாது என்று தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Story first published: Thursday, April 22, 2021, 11:08 [IST]
Other articles published on Apr 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+