Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டனை மாற்றியும் பலனில்லை.. ஒரே ரிசல்ட் தான்.. மீண்டும் படுதோல்வி அடைந்த ஐதராபாத் அணி!

அகமதாபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை தழுவியது.

ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 165/8 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.

பவர் ப்ளே

பவர் ப்ளே

டாஸ் வென்ற ஐதாராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் யாஷாஸ்வி ஜெய்ஷ்வால் 12 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜாஸ் பட்லர் - சஞ்சு சாம்சன் ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை மீட்டனர். இதனால் பவர் ப்ளேவின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.

ஜாஸ் பட்லர்

ஜாஸ் பட்லர்

தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியை விஜய் சங்கர் பிரித்தார். சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். 2வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 150 ரன்கள் சேர்த்தனர். ஆனால் மறுபுறம் ஜாஸ் படலரின் அதிரடி குறையவே இல்லை.

சதம்

சதம்

ஐதராபாத் அணியின் பவுலர்கள் புவேனஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அஹ்மது, விஜய் சங்கர் ஆகியோரின் ஓவர்களில் ரன் மழை பொழிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 64 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் விளாசினார்.

வெற்றி கட்டாயம்

வெற்றி கட்டாயம்

இந்த ஐபிஎல் தொடரில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஐதராபாத் அணி சார்பில் சந்தீப் சர்மா, ரஷித் கான், விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஐதராபாத் அணி இன்று வில்லியம்சன் தலைமையில் களமிறங்கியுள்ளது. அந்த அணி இமாலய ஸ்கோரை எட்டி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனினும் வார்னர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியில் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. மணிஷ் பாண்டே - ஜானி பேர்ஸ்டோவின் சிறப்பான ஆட்டத்தால் பவர் ப்ளேவின் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் சேர்த்தது. எனினும் அந்த பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறப்பாக ஆடி வந்த மணிஷ் பண்டே 31 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 30 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 57 ரன்கள் சேர்த்தது.

மீண்டும் தோல்வி

மீண்டும் தோல்வி

இவர்களின் விக்கெட்டிற்கு பின்னர் எந்த வீரரும் அணியை மீட்கவில்லை. கேப்டன் வில்லியம்சன் (20), விஜய் சங்கர் (8), கேதர் ஜாதவ் (19) முகமது நபி (17), அப்துல் சமாத் (10), ரஷித் கான் (0) எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்களை இழந்து 165 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய முஸ்திவிசூர் ரஹ்மான், கிறிஸ் மோரிஸ் தலா 3 விக்கெட்களையும், கார்த்திக் தியாகு, ராகுல் தேவட்டியா தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தது.

Story first published: Sunday, May 2, 2021, 19:29 [IST]
Other articles published on May 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+