Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தில்லான முடிவு.. கேதார் ஜாதவை உள்ளே கொண்டு மிகப்பெரிய தியாகம் செய்த வார்னர்.. பரபர பிளானிங்!

சென்னை: ஹைதராபாத் அணியில் முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதார் ஜாதவ் இன்று அறிமுகம் ஆகிறார்.

Recommended Video

SRHல் இனி அதிரடிக்கு Kane Williamson அமைதிக்கு Kedar jadhav |Oneindia Tamil

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் ஆடியவர் கேதார் ஜாதவ். கிட்டத்தட்ட 6 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக இவர் ஆடினார்.சிஎஸ்கே அணியின் தோல்விக்கு அந்த தொடரில் முக்கிய காரணமாக இருந்தார்.

இவருக்கு எதிராக கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இதையடுத்து 2021 ஐபிஎல் தொடருக்கு முன்பாக கேதார் ஜாதவ் மொத்தமாக அணியில் இருந்தே ரிலீஸ் செய்யப்பட்டார்.

ஏலம்

ஏலம்

இந்த நிலையில் இந்த வருடம் ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்ட ஜாதவ் மொத்தமாக ஓரம் கட்டப்பட்டுள்ளார். ஹைதராபாத் அணியால் இவர் 2 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். ஆனால் கடந்த மூன்று போட்டிகளாக இவருக்கு அணியில் இறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த நிலையில் இன்று ஜாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜாதவ் உள்ளே வருவதால் மிடில் ஆர்டரில் ஆடி வந்த சமத் நீக்கப்பட்டுள்ளார். முதல் போட்டியில் நன்றாக ஆடிய சமத் அதன்பின் இரண்டு போட்டிகளில் சொதப்பினார்.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் துணிச்சலாக சமத்தை தியாகம் செய்துவிட்டு ஜாதவ் உள்ளே வந்துள்ளார். ஆனால் இவர் சமத்திற்கு பதிலாக வந்தாரா அல்லது மணீஷ் பாண்டேவுக்கு பதிலாக வந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் இவர் உள்ளே வந்த நிலையில் மணீஷ், சமத் என்று இரண்டு முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

கடந்த சீசனில் ஜாதவ் சரியாக ஆடாத போதும் அவருக்கு வார்னர் ஹைதராபாத் அணியில் வாய்ப்பு வழங்கி உள்ளார். மிடில் ஆர்டரில் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய கேதார் ஜாதவை வார்னர் பயன்படுத்த வாய்ப்புள்ளது. சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இவர் சிறப்பாக ஆடினார். இதன் காரணமாக இன்றைய போட்டியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Wednesday, April 21, 2021, 17:27 [IST]
Other articles published on Apr 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+