Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓப்பனிங்கில் அதிரடி மாற்றம்..வாய்ப்பை இழக்கும் முக்கிய வீரர்கள்..கேகேஆர் அணியின் ப்ளேயிங் 11 கணிப்பு

அகமதாபாத்: டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்காக ப்ளேயிங் 11ல் மிகப்பெரும் மாற்றத்துடன் கொல்கத்தா அணி களமிறங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.

இந்த தொடரில் மிகவும் மோசமாக செயல்பட்டு வரும் கொல்கத்தா அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு ஓப்பனிங் சரியாக செயல்படாததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

 ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கும் சுப்மன் கில், நிதிஷ் ராணா ஜோடி சிறப்பான தொடக்க தராமல் வெளியேறுவதால் பின்னால் வரும் வீரர்களுக்கு கடும் பிரஷர் விழுகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் நிதிஷ் ராணா முதல் போட்டியில் மட்டும் சிறப்பாக ஆடினார். ஆனால், சுப்மன் கில் இதுவரை ஒரு போட்டியில் கூட தனது திறமையை நிரூபிக்கவில்லை.

சுப்மன் கில்

சுப்மன் கில்

22 வயதாகும் சுப்மன் கில் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் வெறும் 89 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக ஒரே ஒரு போட்டியில் 33 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் பந்துகளை திண்றுவிட்டு, பவர் ப்ளேவிலேயே அவுட்டாகி விடுவதால் அடுத்து வரும் வீரர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த போட்டியில் ஓப்பனிங்கில் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

தற்போது முதல் விக்கெட்டிற்கு களமிறங்கி வரும் ராகுல் திரிபாதி, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 6 போடிகளில் அவர் 168 ரன்களை எடுத்துள்ளார். எனவே அவரை இந்த முறை ஓப்பனிங் களமிறக்க வாய்ப்புள்ளது. அதே போன்று மற்றொரு ஓப்பனராக சுனில் நரேன் களமிறக்கப்படலாம். முந்தைய சீசன்களில் ஓப்பனராக ஆடிய நரேன் அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்திவிட்டு செல்வார். இதனால் கொல்கத்தாவுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும்.

புதிய வாய்ப்பு

புதிய வாய்ப்பு

தற்போது ஓப்பனராக ஆடி வரும் நிதிஷ் ராணா 3வது இடத்திற்கு தள்ளப்படலாம். ஏனென்றால் கடந்த சீசனில் 3வது வீரராக அவர் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார். அதே போல சுப்மன் கில்லுக்கு மாற்றாக மிடில் ஆர்டரில் குர்கீரத் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

ப்ளேயிங் 11 கணிப்பு:

ப்ளேயிங் 11 கணிப்பு:

ராகுல் திரிபாதி, சுனில் நரேன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன், குர்கீரத் சிங், ஆண்ட்ரே ரஸல், பேட் கம்மின்ஸ், ஷிவம் மணி, பிரஷித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி

Story first published: Thursday, April 29, 2021, 17:50 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+