Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘நான் தான் பிரச்னையா இருக்கேன்’.. பஞ்சாப்-க்கு எதிரான தோல்வி.. பொதுவெளியில் மனம் கலங்கிய மோர்கன்!

அமீரகம்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இயான் மோர்கன் கவலை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா அணியும், கேஎல் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

20 ஓவர்களின் முடிவில் 165 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடின இலக்கு

கடின இலக்கு

இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், த்ரிப்பாதி மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் சிறப்பான ஆட்டம் காரணமாக முதல் 15 ஓவர்களில் நல்ல நிலையில் இருந்தது. அதன் பின்னர் வந்த இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் மற்றும் டிம் சைபர்ட் ஆகியோ சொற்ப ரன்களுக்கு சுருண்டனர். இதனால் 20 ஓவர்களின் முடிவில் 165 ரன்களை மட்டுமே குவித்தது.

Recommended Video

Mumbai Indians declares Hardik Pandya won’t bowl this year | OneIndia Tamil
கேகே ஆர் சொதப்பல்

கேகே ஆர் சொதப்பல்

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 168 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக தொடக்க வீரர்கள் ராகுல் 67, ரன்களும் மயங்க் அகர்வால் 40 ரன்களும் குவித்தனர். அதே போன்று தமிழக வீரரான ஷாருக்கான் கடைசி நேரத்தில் 9 பந்துகளில் 2 சிக்ஸர் ஒரு மற்றும் ஒரு பவுண்டரி என 22 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் பஞ்சாப் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இயான் மோர்கன்

இயான் மோர்கன்

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன், நாங்கள் இந்த போட்டிகளில் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. பல கேட்ச்களை தவற விட்டோம். அதுதான் இந்த போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாகவே போராட்டத்தை அளித்திருந்தோம்.

மிக வருத்தம்

மிக வருத்தம்

பேட்ஸ்மேன்கள் இன்னும் நிறைய ரன்களை குவித்து இருக்கவேண்டும். இந்த மைதானத்தில் இது வெற்றிக்கு போதுமானதாக போதுமான ஸ்கோர் கிடையாது. அதுமட்டுமின்றி முக்கியமான நேரத்தில் நாங்கள் தவறவிட்ட சில முக்கியமான கேட்ச்களும் இந்த போட்டியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தன என மோர்கன் வருத்தப்பட்டார்.

Story first published: Saturday, October 2, 2021, 14:15 [IST]
Other articles published on Oct 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+