Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதி.. அந்த அணியில் மட்டும் பாதிப்பு அதிகம்.. குழப்பத்தில் நிர்வாகம்!

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடரின் இடையே கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தியிடம் தொடங்கிய கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து வேகமாக பரவி வருகிறது.

கொல்கத்தா

கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் போது ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற வருண் சக்கரவர்த்தி, குவாரண்டைனில் இருக்காமலேயே மீண்டும் அணியின் பபுளுக்கு திரும்பினார். இதனால் அந்த அணியில் முதலில் வருண் சக்கரவர்த்திக்கும், பின்னர் சந்தீப் வாரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 பாசிடிவ்

பாசிடிவ்

இந்நிலையில் அந்த அணியில் தற்போது 3வது நபராக நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃப்ரெட்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வந்த அவருக்கு 2 முறை எடுக்கப்பட்ட பரிசோதனையிலுமே பாசிடிவ் என முடிவு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சிகிச்சை

சென்னை

சென்னை

இதனையடுத்து அவர் சென்னையில் சிஎஸ்கே பயிற்சியாளர் மைக் ஹசி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் டேவிட் வைட், டிம் செய்ஃப்ரெட்-க்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம். விரைவில் அவர் மீண்டு வருவார். மேலும் அவரின் குடும்பத்தாருக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

தனி விமானம்

தனி விமானம்

ஐபிஎல்-ல் பங்குபெற்ற நியூசிலாந்து வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப 2 தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஒன்று ஏற்கனவே சென்றுவிட்ட நிலையில், 2வது விமானம் இன்று மாலைக்குள் கிளம்பும் என தெரிகிறது. டிம் செய்ஃபெர்ட் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்த பிறகு நியூசிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

Story first published: Saturday, May 8, 2021, 23:44 [IST]
Other articles published on May 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+