Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரிட் லீ ஸ்டைல்.. ஹைதராபாத்தை கலங்கடித்த இளம் பவுலர்.. இவரை உடனே வேர்ல்ட் கப் டி 20 டீம்ல எடுங்க!

சென்னை: ஹைதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் இளம் பவுலர் பிரஷித் கிருஷ்ணா மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அதிரடியாக ஆடி 20 ஓவருக்கு 187/6 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத்திற்கு கொல்கத்தா 188 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

பிட்ச்

பிட்ச்

இந்த பிட்ச் முதல் இன்னிங்சிலேயே பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. ஸ்பின், ஸ்பீட் என்று எதற்கும் பெரிய அளவில் பிட்ச் ஒத்துழைக்கவில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு கொல்கத்தா வீரர்கள் ஹைதராபாத் அணியை துவைத்து எடுத்தனர். முக்கியமாக ராணா, ராகுல் இருவரும் சிறப்பாக ஆடினார்கள்.

சிறப்பு

சிறப்பு

ஓப்பனிங் இறங்கிய ராணா வெறும் 56 பந்தில் 80 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம். இன்னொரு பக்கம் ராகுலும் 29 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். இப்படி பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது.

பவுலிங்

பவுலிங்

ஆனால் இதே பேட்டிங் பிட்சில் கொல்கத்தா வீரர் பிரஷித் கிருஷ்ணா சிறப்பாக பவுலிங் செய்தார். இவர் வீசிய முதல் இரண்டு ஓவரும் ஹைதராபாத் அணிக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுத்தது. சரியான லைன், துல்லியமான லென்த் என்று பிரஷித் தூள் கிளப்பினார்.

முதல் ஓவர்

முதல் ஓவர்

இவர் தன்னுடைய முதல் ஓவரிலேயே வார்னரின் விக்கெட்டை எடுத்து அசத்தினார். துல்லியமான லைனில் பவுல் செய்து வார்னர் விக்கெட்டை எடுத்து ஹைதராபாத் அணியை கலங்கடித்தார். கடந்த இந்தியா vs இங்கிலாந்துக்கு இடையிலான தொடரில்தான் பிரஷித் அறிமுகம் ஆனார். அந்த தொடரிலேயே இவர் நன்றாக பவுலிங் செய்தார்.

உயரம்

உயரம்

உயரமாக இருக்கும் இருக்கும் பிரஷித் கிட்டத்தட்ட பிரிட் லீ ஸ்டைலிலேயே பவுலிங் செய்கிறார். எளிதாக 140+ கிமீ வேகத்தில் பவுலிங் செய்கிறார். இவரை இந்திய அணியில் உலகக் கோப்பை டி 20 தொடருக்காக எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவை சேர்ந்த இவர் கடந்த 2-3 வருடமாக ரஞ்சி கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார். அதற்கு முன் சில விஜய் ஹசாரே போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார். இன்றைய போட்டியிலும் இவர் இதுவரை நன்றாக பவுலிங் செய்துள்ளார்.

Story first published: Monday, April 12, 2021, 8:06 [IST]
Other articles published on Apr 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+