அந்த பக்கம் கூட வர கூடாது.. கோலி, ரோஹித்துக்கு ஒன்றாக பறந்த வார்னிங் மெயில்.. ஐபிஎல்லுக்கு முன் ஷாக்
சென்னை: ஐபிஎல் ஏலம் தொடர்பான மீட்டிங்கில் கலந்து கொள்ள கூடாது என்று கோலி, ரோஹித் சர்மாவிற்கு எச்சரிக்கை மெயில் சென்றுள்ளது.
2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான மினி ஏலம் நாளை மறுநாள் சென்னையில் நடக்க உள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் இந்த ஐபிஎல் தொடருக்கு ஏற்றபடி திட்டங்களை வகுத்து வருகிறது. ஒவ்வொரு அணியிலும் நிறைய அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

சிஎஸ்கே
இந்த நிலையில் ஐபிஎல் 2021 மினி ஏலத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி கலந்து கொள்ளவில்லை. இவர் அணியின் மீட்டிங் எதிலும் கலந்து கொள்ள சென்னை வரவில்லை. அதேபோல் பிளமிங்கும் இதற்காக சென்னை வர போவதில்லை.

மீட்டிங்
இவர்கள் ஆன்லைன் மீட்டிங் நடத்துவார்கள். ஏலத்தின் போது போனில் இணைந்து இருப்பார்கள். இந்த நிலையில்தான் ஐபிஎல் ஏலம் தொடர்பான மீட்டிங்கில் கலந்து கொள்ள கூடாது என்று கோலி, ரோஹித் சர்மாவிற்கு எச்சரிக்கை மெயில் சென்றுள்ளது.

சென்னை
சென்னையில் இந்த ஏலம் நடப்பதால் இவர்கள் தங்கள் ஐபிஎல் அணியுடன் மீட்டிங்கில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இது கொரோனா விதிமுறைக்கு, அணியின் பயோ பபுளுக்கும் எதிரானது. இதனால் அணியின் மீட்டிங்கில் ஆன்லைனில் மட்டுமே இவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

ஏலம்
ஏலத்திற்கு செல்ல கூடாது. போனில் பேசலாம் என்று ரோஹித் கோலி ஆகியோருக்கு உத்தரவு சென்றுள்ளது. கொரோன பயோ பபுள் காரணமாக இப்படி கூறப்பட்டுள்ளது. இதே மெய்யில் பஞ்சாப் கேப்டன் ராகுலுக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications