Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த ஒரு போட்டோ போதும்.. இனிமே வாயை திறப்பீங்க? "புல்-ஸ்டாப்" வைத்த கோலி - ரோஹித்.. செம டிவிஸ்ட்!

சென்னை: மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் முதல் ஐபிஎல் போட்டியில் கோலி - ரோஹித் சர்மா நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்து வருகிறது.

மும்பை அணியில் ரோஹித் சர்மா 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகிவிட்டார். மும்பை அணி சீக்கிரமே விக்கெட்டை இழந்தாலும் அதிரடியாக ஆடி வருகிறது.

எப்படி?

எப்படி?

இந்த நிலையில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் முதல் ஐபிஎல் போட்டியில் கோலி - ரோஹித் சர்மா நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இன்று மைதானத்திற்கு வந்ததில் இருந்தே ரோஹித் - கோலி நெருக்கமாக காணப்பட்டனர். ஜாலியாக பேசிக்கொண்டே உள்ளே வந்தனர்.

கோபம்

கோபம்

இவர்களுக்கு இடையில் மோதல், ஈகோ மோதல் என்றெல்லாம் நிறைய கருத்துக்கள் வைக்கப்பட்டது. ரோஹித் - கோலி இடையே சண்டை இருக்கிறது. முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் வீரர்களை கோலி விரும்ப மாட்டார் என்றெல்லாம் நிறைய செய்திகள் வெளியாகின.

நெருக்கம்

நெருக்கம்

அதிலும் ஐபிஎல் போட்டிகளில் இவர்களுக்கு இடையில் மோதல் அதிகம் இருக்கும் என்றெல்லாம் கருத்து நிலவி வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவருமே இன்று நெருக்கமாக காணப்பட்டனர். சிரித்துக்கொண்டே கையை கோர்த்துக்கொண்டு கோலி ரோஹித் இருவரும் சில நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர்.

போட்டோ

போட்டோ

இவர்கள் இருவரும் ஒன்றாக சிரித்துக்கொண்டு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து.. பாருங்க இவங்க ரெண்டு பேரும் க்ளோசாதான் இருக்காங்க.. இவங்களுக்கு இடையில் எந்த மோதலும் இல்லை.

மோதல்

ஈகோ மோதல் குறித்த வதந்திக்கு எல்லாம் இவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள். இத்தனை நாட்கள் இவர்களுக்கு இடையில் உரசல் என்று வெளியான செய்திகளுக்கு எல்லாம் ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Story first published: Friday, April 9, 2021, 20:04 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+