Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித்தின் மாஸ்டர் பிளான்.. பாதிக்கு மேல் தலைகீழாக மாறிய போட்டி.. கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை

மும்பை: கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பக்கா பிளானோடு ஆடிய மும்பை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மும்பைக்கும் கொல்கத்தாவிற்கும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணி பெரிய அளவில் அதிரடி காட்டாமல் 20 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 152 ரன்களை மட்டும் எடுத்தது. இந்த நிலையில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

கட்டாயம்

கட்டாயம்

முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது. மும்பை முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில்தான் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியும் சென்னை சேப்பாக்கத்திலேயே நடக்கிறது.

சென்னை

சென்னை

மும்பைக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்துள்ளது. சென்னை பிட்சில் ஸ்பின் பவுலர்கள் நன்றாக பவுலிங் செய்ய முடியும். இங்கு சேசிங் செய்வது எளிது என்பதால் கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

மும்பை

மும்பை

மும்பை அணியில் இன்று டி காக் களமிறங்குகிறார். இன்று ஆடும் மும்பை அணியில் ரோஹித் சார்மா, டி காக், சூரியகுமார், இஷான் கிஷான்., ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, பொல்லார்ட், மார்கோ ஜென்சன், ராகுல் சாகர், டிரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் ஆடுகிறார்.

கொல்கத்தா

கொல்கத்தா

இன்று ஆடும் கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணா, கில், ராகுல் திரிப்பாதி, இயான் மோர்கன், ஆண்ட்ரு ரசல், தினேஷ் கார்த்திக், சாகிப் அல் ஹசன், பாட் கும்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஆடுகிறார்கள்.

பேட்டிங்

பேட்டிங்

இதையடுத்து பேட்டிங் இறங்கிய மும்பை அணி தொடக்கத்திலேயே திணறியது. டி காக் தொடக்கத்திலேயே 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதன்பின் ரோஹித், சூர்யா பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினார்கள். இதில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக 56 ரன்கள் எடுத்தார். ரோஹித் நிதானமாக 43 ரன்கள் எடுத்தார்.

வேறு யாரும் இல்லை

வேறு யாரும் இல்லை

ஆனால் வேறு யாரும் பெரிதாக ஆடவில்லை. ஹர்திக் பாண்டியா 15, குர்னால் பாண்டியா 15 ரன்களை எடுத்தனர். ரசல் கொல்கத்தா அணிக்காக வெறும் 2 ஓவர் வீசி 5 விக்கெட் எடுத்தார். வருண், ஹர்பஜன், ஷாகிப் ஆகியோரும் நன்றாக பவுலிங் செய்தனர். எப்போதும் அதிரடியாக ஆடும் மும்பை அணி இன்று 152 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

பேட்டிங்

பேட்டிங்

இதையடுத்து கொல்கத்தா அணி பேட்டிங் இறங்கியது. கொல்கத்தா அணியின் ஓப்பனிங் சிறப்பாகவே இருந்தது. கில் அதிரடியாக 24 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் ராணா தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டி 47 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று அதிரடி காட்டி 57 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் கொல்கத்தாவில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

அவுட்

அவுட்

கேப்டன் இயான் மோர்கன் ராகுல் திரிப்பாதி 5 ரன்னுக்கும், இயான் மோர்கன் 7 ரன்னுக்கும், ஷாகிப் 9 ரன்னுக்கும் அவுட் ஆனார்கள். இதனால் கொல்கத்தா மிடில் ஓவர்களில் கொஞ்சம் தடுமாற தொடங்கியது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மும்பை அணி சிறப்பாக பவுலிங் செய்தது. முக்கியமாக அட்டாக்கிங் பீல்டிங் வைத்து ரோஹித் சர்மா தெறிக்கவிட்டார்.

விக்கெட்

விக்கெட்

சிறப்பாக பவுலிங் செய்த ராகுல் சாகர் 4 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். அதன்பின் வரிசையாக கொல்கத்தா அணி மோசமாக திணறியது. கடைசி ஓவரில் இந்த நிலையில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த நிலையில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

Story first published: Tuesday, April 13, 2021, 23:21 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+