Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓவர் திமிர்.. இவருக்கு இனி வாய்ப்பே கொடுக்க கூடாது.. இளம் வீரருக்கு எதிராக கொதிக்கும் பேன்ஸ்.. ஏன்?

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குர்ணால் பாண்டியா நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

மும்பை அணியில் ஆடி வரும் குர்ணால் பாண்டியா கடந்த சில மாதங்களாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். சக வீரர்களிடம் இவர் திமிராக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரிலேயே இவர் தீபக் ஹுடாவிடம் மோதியது சர்ச்சையானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் ஐபிஎல் தொடரில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குர்ணால் பாண்டியா நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இவர் பேட்டிங் செய்த போது ஸ்டிராட்டஜிக் டைம் அவுட்டில் சக மும்பை வீரர் அங்குள் ராய் இவருக்கு சானிடைசர் கொடுத்தார். கையை துடைத்துக் கொள்வதற்காக குர்ணால் பாண்டியாவிற்கு அங்குள் ராய் சானிடைசர் கொடுத்தார்.

குர்ணால்

குர்ணால்

இதை பயன்படுத்திய குர்ணால் பாண்டியா, அதை அப்படியே தூக்கி அங்குள் ராயிடம் தூக்கி வீசினார். அவர் முகத்தை கூட பார்க்காமல், கொஞ்சம் கூட அவரை மதிக்காமல் அப்படியே அந்த சானிடைசரை குர்ணால் பாண்டியா தூக்கி வீசினார்.

தவறு

தவறு

அங்குள் ராய் கிரிக்கெட் போட்டிகளில் பெரிதாக ஆடியது இல்லை. இவர் பெரிய வீரர் கிடையாது. இதனால் அவரை மதிக்காமல் வேண்டும் என்றே குர்ணால் பாண்டியா இப்படி மோசமாக நடந்து கொண்டார். இந்த சம்பவம் பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது.

அங்குள் ராய்

அங்குள் ராய்

குர்ணால் இப்படி நடந்து கொண்டது வீடியோவாக வெளியாகி உள்ளது. சக வீரரை தரக்குறைவாக இவர் நடத்தியதாக பலர் புகார் வைத்து வருகிறார்கள். இது போன்ற திமிரான வீரர்களுக்கு இனியும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்று நெட்டிசன்கள் பலர் கொந்தளித்து வருகிறார்கள்.

Story first published: Saturday, May 1, 2021, 16:26 [IST]
Other articles published on May 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+