Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை எல்லாம் தெரியாம எடுத்துட்டோம்.. ஒரே வருடத்தில் வீரர்களை வீட்டுக்கு அனுப்பிய கும்ப்ளே!

மும்பை : 2021 ஐபிஎல் தொடருக்கு முன் ஐபிஎல் அணிகள் வீரர்களை விடுவித்து வருகின்றன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த ஐபிஎல் சீசனில் மோசமாக செயல்பட்ட நிலையில், அணியில் இருந்து ஏழு வீரர்களை விடுவித்துள்ளது

'டாடிஸ் ஆர்மி' அடையாளத்தை மாத்தறதுக்கு சரியான நேரம் இதுதான்... சிஎஸ்கேவுக்கு சோப்ரா அறிவுரை .

அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஒரே ஆண்டில் சில வீரர்களை அணியில் இருந்து விடுவித்து இருக்கிறார்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

அதில் கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரேல், முஜீப் உர் ரஹ்மான், ஜிம்மி நீஷம் போன்றோர் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் கடந்த ஐபிஎல் ஏலத்தில் அப்போது புதிதாக பொறுப்பேற்ற பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவால் ஏலத்தில் வாங்கப்பட்டவர்கள்.

படுமோசம்

படுமோசம்

ஆனால், அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. குறிப்பாக ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் படு மோசமாக செயல்பட்டார். அதிரடி மன்னனான அவர் கடந்த சீசனில் ஒரு சிக்ஸ் கூட அடிக்காதது தான் இதில் உச்சகட்டம்.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

கிளென் மேக்ஸ்வெல்-இன் சம்பளம் 10.75 கோடி ஆகும். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரேல் 8.5 கோடிக்கு வாங்கப்பட்டு இருந்தார். அவரது விலை அதிகம் என சென்ற ஏலத்தில் கூட பேச்சு எழுந்தது. அவரையும் விடுவித்துள்ளது பஞ்சாப். கருண் நாயருக்கும் டாட்டா காட்டி உள்ளது.

வீரர்கள் பட்டியல்

வீரர்கள் பட்டியல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம் - கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரேல், கிருஷ்ணப்பா கௌதம், முஜீப் உர் ரஹ்மான், ஜிம்மி நீஷம், ஹார்டஸ் வில்ஜோன், கருண் நாயர்

Story first published: Wednesday, January 20, 2021, 18:36 [IST]
Other articles published on Jan 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+