Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லின் அடுத்த "ராட்சச ரசல்".. சிஎஸ்கே ஸ்கெட்ச் போட்ட 7 அடி இமயம்.. யாரும் எதிர்பார்க்காத திட்டம்

சென்னை: சிஎஸ்கே அணி இந்த வருட ஏலத்தில் கைலி அலெக்ஸ் ஜாமிசனை குறி வைக்கும் என்று கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை நடக்க உள்ளது. சென்னையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி எடுக்க போகும் வீரர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர். சிஎஸ்கே அணி 6 வீரர்களை எடுக்க உள்ளது.

சென்னை

சென்னை

இந்த நிலையில் சிஎஸ்கே அணி இந்த வருட ஏலத்தில் கைலி அலெக்ஸ் ஜாமிசனை குறி வைக்கும் என்று கூறப்படுகிறது. இவர் நியூசிலாந்து அணியில் அறிமுகம் ஆகி இருக்கும் புதிய சூப்பர் ஸ்டார் ஆவார். நியூசிலாந்து அணிக்காக மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.

ஏலம்

ஏலம்

சர்வதேச அளவில் இப்போதுதான் கைலி அலெக்ஸ் கவனம் பெற தொடங்கி உள்ளார். 7 அடி உயரம் இருக்கும் இவர் எளிதாக கிமீ வேகத்தில் பவுலிங் செய்வார். அதேபோல் பீல்டிங்கிலும் கைலி அலெக்ஸ் மிகவும் சிறப்பாக செயலாற்ற கூடியவர்.

எப்படி?

எப்படி?

பேட்டிங்கில் ரசல் போல ஆடும் ஸ்டைல் கொண்டவர். சிக்ஸ், பவுண்டரிகளை எளிதாக அடிக்கும் வல்லமை கொண்டவர். பவுலிங், பேட்டிங் இரண்டும் ரசல் போல இருப்பதால் இவரை சிறந்த ஐபிஎல் மெட்டீரியல் என்கிறார்கள். இந்த ஏலத்தில் இவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது .

வாய்ப்பு

வாய்ப்பு

இவரை சிஎஸ்கே அணி ஏலத்தின் போது எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். தொடரின் பாதியில் சாம் கரண் வெளியேறுவார். அவருக்கு மாற்று வீரராக இவரை பயன்படுத்திக் கொள்ள சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. இவர் நியூசிலாந்து வீரர் என்பது இதில் கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

பயிற்சியாளர் பிளமிங்

பயிற்சியாளர் பிளமிங்

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் இவரிடம் சிஎஸ்கே குறித்து பேசி இருக்கிறார். இதனால் இந்த ஏலத்தில் இவரை குறி வைக்க வாய்ப்புகள் உள்ளது. மும்பை, ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய அணிகளும் இவரை குறி வைக்கும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, February 17, 2021, 13:27 [IST]
Other articles published on Feb 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+