Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன லட்சுமணன் வந்து இப்படி சொல்றாரு? நடராஜனுக்கு உண்மையில் என்னதான் ஆனது? பெரிய குழப்பம்!

சென்னை: ஹைதராபாத் அணியில் ஆடும் நடராஜன் நேற்று ஏன் பிளேயிங் 11 அணியில் எடுக்கப்படவில்லை என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக ஆடவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் நடராஜன் நன்றாக ஆடினார். ஆனாலும் அவருக்கு நேற்று வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இவருக்கு பதிலாக கலீல் அகமது அணியில் எடுக்கப்பட்டார். திடீரென நடராஜன் ஓரம்கட்டப்பட்டது ஏன் என்று நிறைய கேள்விகள் எழுந்தன.

டாம் மூடி

டாம் மூடி

இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் இயக்குனர் டாம் மூடி இது குறித்து பேசுகையில், நடராஜன் நீக்கப்படவிலை. அவர் தொடர்ந்து நிறைய போட்டிகளில் ஆடுவதால் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று கூறினார்.

நடராஜன்

நடராஜன்

ஆனால் இன்னொரு பக்கம் நடராஜனுக்கு காலில் காயம். முட்டி பகுதியில் காயம். இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.

விளக்கம்

விளக்கம்

இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமணன் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். அதில், நடராஜனுக்கு இடதுகாலில் காயம். அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டுள்ளது.

நலன்

நலன்

நடராஜனின் நலன் கருதி அவரை அணியில் எடுக்கவில்லை. மருத்துவ ரிப்போர்ட் வந்த பின்தான் அவர் தொடர்ந்து அணியில் ஆடுவது குறித்து முடிவு எடுக்கப்படும், கலீல் அகமது சிறப்பாக ஆடினார் என்று லட்சுமணன் கூறியுள்ளார்.

குழப்பம்

குழப்பம்

லட்சுமணனின் இந்த பேட்டி குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. டாம் மூடி ஒரு பக்கம் நடராஜனுக்கு ஓய்வு என்கிறார். லட்சுமணன் இன்னொரு பக்கம் நடராஜனுக்கு காயம் என்கிறார். உண்மையில் யார் சொல்வதுதான் நிஜம் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, April 18, 2021, 11:24 [IST]
Other articles published on Apr 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+