Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கும்மேல முடியாது..பாதி தொடரில் வெளியேறிய வீரர்.. "முக்கிய" அணிக்கு சிக்கல்.. அடுத்தடுத்து ஷாக்

சென்னை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி செய்திகள் சென்று கொண்டு இருக்கிறது.

Recommended Video

IPL 2021 தொடரில் இருந்து வெளியேறிய மற்றொரு வீரர்.. சிக்கலில் இருக்கும் Rajasthan அணி

2021 ஐபிஎல் ராஜஸ்தான் அணி புதிய வீரர்கள் மற்றும் கேப்டனுடன் களமிறங்கி உள்ளது. ராஜஸ்தான் கேப்டனாக சஞ்சு சாம்சன் களமிறங்கி உள்ளார்.

இதுவரை 3 போட்டிகள் ஆடி உள்ள ராஜஸ்தான் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தான் இதுவரை பெரிய அளவில் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தவில்லை.

ஆதிக்கம்

ஆதிக்கம்

ராஜஸ்தான் அணியில் முக்கியமான வீரர்கள் இல்லாததுதான் அந்த அணிக்கு முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. ராஜஸ்தான் அணியில் ஏற்கனவே ஆர்ச்சர் காயம் காரணமாக ஆடவில்லை. இவருக்கு காயம் சரியாகிவிட்டாலும் இன்னும் முழுமையாக அணியுடன் இணையவில்லை.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

அதேபோல் ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் அடைந்தார். இவரின் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் தற்போது அணியில் இருந்து வெளியேறி, இங்கிலாந்துக்கு ஆப்ரேஷன் செய்ய சென்றுள்ளார்.

வெளியேற்றம்

தற்போது ராஜஸ்தான் அணிக்கு அடுத்த அதிர்ச்சி செய்தியாக லியாம் லிவிங்ஸ்டோன் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். 2021 ஐபிஎல் தொடருக்காக லியாம் லிவிங்ஸ்டோன் ஏலம் எடுக்கப்பட்டார். 75 லட்சம் ரூபாய்க்கு இங்கிலாந்து வீரரான லியாம் ஏலம் எடுக்கப்பட்டார்.

 வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

ஆனால் கடந்த மூன்று போட்டியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா பயோ பபுளை காரணம் காட்டி தற்போது லியாம் லிவிங்ஸ்டோன் வெளியேறி உள்ளார். ராஜஸ்தான் அணியில் மூன்றாவது வீரரும் இப்படி வெளியேறி உள்ளதால் அந்த அணி அதிர்ச்சியில் உள்ளது.

Story first published: Wednesday, April 21, 2021, 15:44 [IST]
Other articles published on Apr 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+