Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ஐ அச்சுறுத்தும் கொரோனா.. இதுவரை தொற்று உறுதியான வீரர்கள் யார்? யார்?.. முழு பட்டியல் இதோ!

மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டு வருவது கிரிக்கெட் உலகை அதிரவைத்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் கோர பிடியில் சிக்கியிருக்கும் நிலையிலும் ஐபிஎல் தொடர் பயோ பபுள் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்.9ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இறுதிப்போட்டி ஏப்.30ம் தேதி நடக்கவுள்ளது.

தொடருக்கு முன்னர்

தொடருக்கு முன்னர்

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே அனைத்து வீரர்களும் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் அணியின் பபுளுக்குள் சேர்க்கப்பட்டனர். எனினும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே டெல்லி அணி வீரர் அக்‌ஷர் பட்டேலுக்கும், கொல்கத்தா அணி வீரர் நிதிஷ ராணாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் இருவரும் கொரோனா நெகட்டீவ் ஆன பிறகு ஆடத்தொடங்கினர்.

ஆர்சிபி

ஆர்சிபி

இதே போல ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் தேவ்தத் பட்டிகல்லுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் குணமடைந்த செய்தி வந்து சேர்வதற்குள் அந்த அணியின் மற்றொரு வீரரான டேனியல் சாம்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆனால் தற்போது இருவரும் குணமடைந்து அணியுடன் இணைந்து விளையாடி வருகின்றனர்.

தவறான பரிசோதனை முடிவு

தவறான பரிசோதனை முடிவு

தென்னாப்பிரிக்க வீரரான ஆண்ட்ரிக் நார்ட்ஜே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றிருந்ததால் ஐபிஎல் தொடருக்கு தாமதாமாக வருகை தந்தார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட முதல் பரிசோதனையில் கொரோனா பாசிட்டீவ் என முடிவு வந்தது. பின்னர் 2 நாட்களுக்கு பின்னர் நடத்தப்பட்ட 3வது சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதியானது. மேலும் தவறான பரிசோதனை முடிவால் தேவையின்றி அவர் 2 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

கொல்கத்தா அணி வீரர்கள்

கொல்கத்தா அணி வீரர்கள்

இதுவரை கொரோனா உறுதியானவர்கள் குணமடைந்து அணியுடன் திரும்பிய நிலையில் இன்று மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியை சேர்ந்த வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த அணியில் மேலும் சில வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, May 3, 2021, 18:23 [IST]
Other articles published on May 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+