Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 பேருக்கும் வாய்ப்பு இல்லை.. சிஎஸ்கேவிற்கு பறந்த கெட்ட செய்தி.. குழப்பத்தில் தோனி.. அட போங்கய்யா!

சென்னை: டெல்லிக்கு எதிராக நேற்று சொதப்பிய சிஎஸ்கே அணி அடுத்த போட்டியிலும் இதே பவுலிங் ஆர்டருடன் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக சென்றது. மிக மோசமாக பவுலிங் செய்த சிஎஸ்கே அணி டெல்லியிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இந்த நிலையில் அடுத்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. அடுத்த போட்டி வரும் 16ம் தேதி சிஎஸ்கே பஞ்சாப் இடையே நடக்க உள்ளது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணி நேற்று தோல்வி அடைய முக்கியமான காரணம், அணியில் நல்ல பாஸ்ட் பவுலர்கள் இல்லை. டிரெண்ட் போல்ட், ஹஸல்வுட் போன்ற பாஸ்ட் பவுலர்கள் சிஎஸ்கேவில் இல்லை. ஹஸல்வுட் இந்த முறை ஐபிஎல் ஆடவில்லை என்று கூறி வெளியேறிவிட்டார். இது சிஎஸ்கேவிற்கு பின்னடைவாக மாறியது.

பின்னடைவு

பின்னடைவு

இதனால் இருக்கிற வீரர்களை வைத்து சிஎஸ்கே நேற்று பவுலிங்கை சமாளித்தது. தற்போது சிஎஸ்கே வசம் வெளிநாட்டு பாஸ்ட் பவுலர்களில் சாம் கரன், பிராவோ மட்டுமே உள்ளனர். இரண்டு பேருமே மீடியம் பாஸ்ட் பவுலர்கள்தான்.

சிக்கல்

சிக்கல்

அடுத்த போட்டியில் சிஎஸ்கேவில் பெஹன்டிராப், லுங்கி நிகிடி ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் இருவரும் இந்த வாரம்தான் சிஎஸ்கே அணியில் இணைவார்கள்.

பெஹன்டிராப்

பெஹன்டிராப்

அதிலும் பெஹன்டிராப் சிஎஸ்கேவில் இணைய சில நாட்கள் தாமதம் ஆகும். அதன்பின் கொரோனாவிற்காக தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும். இதனால் இவர் இருவரும் அடுத்த போட்டியில் ஆட மாட்டார்கள்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இவர்கள் இருவரும் அடுத்த போட்டியில் சிஎஸ்கேவில் ஆட வாய்ப்பு இல்லை என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இருக்கிற பவுலர்களை வைத்து சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி இருக்கிறார். அடுத்த போட்டியிலும் சாகர், தாக்கூர் ஆகிய பாஸ்ட் பவுலரை மட்டுமே நம்பி களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது.

Story first published: Sunday, April 11, 2021, 12:22 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+