நேற்று மேட்சில்.. "அந்த" விஷயத்தை நோட் பண்ணீங்களா? சிஎஸ்கேவிற்கு கிடைத்த குட் நியூஸ்.. செம சம்பவம்!
சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் லுங்கி நிகிடி மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார்.
Recommended Video
2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி வருகிறது. முதல் போட்டியில் டெல்லியிடம் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் வரிசையாக வென்று சிஎஸ்கே ஹாட் டிரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அதிரடியாக ஆடி 220 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா 19.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் சிஎஸ்கே 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சிஎஸ்கே
சிஎஸ்கே அணி நேற்று வெற்றிபெற்ற நிலையில் முக்கியமான விஷயம் ஒன்று அணி வீரர்களை சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அது லுங்கி நிகிடியின் வருகை. 2021 சீசனில் நேற்றுதான் முதல் முறையாக லுங்கி நிகிடி சிஎஸ்கே அணிக்காக களமிறங்கினார்.நேற்று மிகவும் சிறப்பாக இவர் பவுலிங் செய்தார்.

லுங்கி
நேற்று 4 ஓவர் வீசிய லுங்கி நிகிடி 3 விக்கெட் எடுத்து 28 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஒரு ஓவருக்கு 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சிஎஸ்கே அணிக்கு இவரின் வருகையால் சிறப்பான பாஸ்ட் பவுலர் தற்போது கிடைத்து இருக்கிறது.

கவனிக்க வேண்டிய விஷயம்
இதில் நேற்று கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் அது லுங்கி வீசிய பவுன்சர்தான். சிஎஸ்கே அணியில் பவுன்சர் வீச ஆட்கள் இல்லாத நிலை இருந்தது. இதை லுங்கி நிகிடிதான் சரி செய்துள்ளார். இவரின் உயரம் காரணமாக எளிதாக பவுன்சர் வீசினார். அதேபோல் இவர் 144+ கிமீ வேகத்தில் வீசுகிறார்.

வேகம்
சிஎஸ்கேவில் கடந்த சில நாட்களாக இந்த வேகம்தான் மிஸ் ஆனது. அதை நேற்று லுங்கி நிகிடி கொண்டு வந்தார். இதனால் சிஎஸ்கே அணி தற்போது முழுமையான பவுலிங் அட்டாக் மற்றும் பேட்டிங் அட்டாக் கொண்ட அணியாக உருவெடுத்துள்ளது. நிறைய ஆல் ரவுண்டர்களும் இருப்பதால் சிஎஸ்கே அணி புதிய விஸ்வரூபம் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications