குட்நியூஸ்.. சிஎஸ்கே பெரிதும் எதிர்பார்த்த 2 விஷயம்.. தோனிக்கு அடுத்தடுத்து பறந்த செய்தி.. சூப்பரு!
சென்னை: சிஎஸ்கே பெரிதும் எதிர்பார்த்த இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்துள்ளன. 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தற்போது புதிய பலம் பெற்றுள்ளது.
Recommended Video
2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வலிமையான அணிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வலிமையாக இருக்கிறது.
பவுலிங் ஆர்டரில் சின்ன சின்ன ஓட்டைகள் இருந்தாலும் கூட சாகர் பார்மிற்கு திரும்பியது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. இன்று ராஜஸ்தானுடன் நடக்கும் போட்டிக்கு சிஎஸ்கே தீவிரமாக தயாராகி வருகிறது.

தயார்
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் முதல் நல்ல விஷயமாக லுங்கி நிகிடி நேற்று அணியுடன் இணைந்துள்ளார். சிஎஸ்கே அணியில் சாம் கரன், பிராவோவை தவிர வெளிநாட்டு பாஸ்ட் பவுலர்கள் இல்லாத நிலையில் நேற்று அணியுடன் இணைந்துள்ளார். கொரோனா விதிமுறை காரணமாக இவர் கடந்த வாரம் தனிமைப்படுத்தப்பட்டார்.

அணியுடன் இணைந்தார்
இந்த நிலையில் நேற்று அணியுடன் இணைந்த லுங்கி நிகிடி பயிற்சியை தொடங்கினார். இன்னொரு நல்ல விஷயமாக ஆஸ்திரேலிய பாஸ்ட் பவுலர் பெஹன்டிராப் நேற்று இரவு மும்பைக்கு வந்து இறங்கினார். சிஎஸ்கே அணியுடன் இவர் அடுத்த வாரம் மும்பையில் இணைவார்.

தனிமை
தற்போது இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் பவுலிங் வலிமை அதிகரித்துள்ளது. இந்த இரண்டு நல்ல செய்தியும் நேற்று தோனிக்கு சென்றுள்ளது. மும்பை பிட்சில் வேகமாக வீச கூடிய வெளிநாட்டு பவுலர்கள் சிஎஸ்கே அணியிடம் இல்லை. இந்த முறை லுங்கி அணியில் இணைந்துள்ளதால் அந்த குறை போய் உள்ளது.

சிறப்பு
லுங்கி நன்றாக பவுன்சர் வீசுவார். டெத் ஓவர்களிலும் குறைவாக ரன் கொடுப்பார். இதனால் மும்பை பிட்சில் சிஎஸ்கே அணிக்கு இவர் சிறப்பான பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று இவர் அணியில் எடுக்கப்படுவாரா என்பது சந்தேகம்தான்.


Click it and Unblock the Notifications