Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதைத்தான் ஏற்கவே முடியல.. பழியை தூக்கி போட்ட தோனி.. சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்?.. பரபர பேச்சு!

மும்பை: நேற்று டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைய என்ன காரணம் என்று தோனி தெரிவித்துள்ளார்.

நேற்று மும்பையில் நடந்த சிஎஸ்கேவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அதிரடியாக ஆடி வென்றுள்ளது. தொடக்கத்தில் இருந்து சிறப்பாக பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது.

மும்பையில் நடந்த இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற கேப்டன் பண்ட் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து சிஎஸ்கே 188 ரன்கள் எடுத்தது. 18.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து டெல்லி எளிதாக வெற்றி பெற்றது

தோனி

தோனி

இந்த போட்டியில் தோல்விக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, இந்த போட்டியில் பனி காரணமாக நிறைய விஷயங்கள் மாறிவிட்டது. பனி முக்கியமான காரணியாக செயல்பட்டது. இதை நாங்கள் எதிர்பார்த்தோம். அதனால்தான் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினோம்.

காரணம்

காரணம்

பேட்ஸ்மேன்கள் நன்றாகவே ஆடினார்கள். 188 ரன்கள் எடுக்கும் அளவிற்கு சிறப்பாக ஆடினார்கள். ஆனால் இரண்டாம் பாதியில் களம் மாறிவிட்டது. நாங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக பவுலிங் செய்து இருக்காம். சிக்ஸ் செல்வதை கூட தவறு என்று சொல்ல முடியாது.

பவுலிங்

பவுலிங்

சில பவுண்டரிகள் சென்றதைதை ஏற்க முடியவில்லை. சில பவுண்டரிகள் சென்றதை பார்க்கும் போது எங்களின் திட்டம் சரியாக வேலை செய்யவில்லை என்றே தோன்றுகிறது. எங்கள் அணியின் பவுலர்கள் தங்கள் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்கள் என்று நம்புகிறேன்.

நல்ல பவுலிங்

நல்ல பவுலிங்

அடுத்தடுத்த போட்டிகளில் இவர்களில் நன்றாக வீசுவார்கள் என்று நம்புகிறேன். இது போன்ற பிட்ச்களில் 200 ரன்கள் எடுக்க வேண்டியது கட்டாயம். அப்போதுதான் அதை டிபன்ட் செய்ய முடியும். டெல்லி பவுலர்கள் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தனர். நல்ல லைனில் பவுலிங் செய்தனர், என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

பவுலர்கள் சரியில்லை

பவுலர்கள் சரியில்லை

நேற்று நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பவுலர்கள் சரியாக செயல்படாததுதான் காரணம் என்று தோனி குறிப்பிட்டுள்ளார். சிக்ஸ் செல்வதை கூட ஏற்கலாம், சில பவுண்டரிகள் தேவையின்றி சென்றதைதான் ஏற்கவே முடியவில்லை என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, April 11, 2021, 8:24 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+