For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி மீது கோபம்.. சரியான நேரத்தில்.. குறிவைத்து பழி வாங்கிய மணீஷ் பாண்டே.. மைதானத்தில் பரபர சம்பவம்

சென்னை: பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் வீரர் மணீஷ் பாண்டே மிகவும் சிறப்பாக பிளான் போட்டு ஆடி வருகிறார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் மூத்த வீரர் மணீஷ் பாண்டேவிற்கும் பல நாட்களாக மோதல் இருக்கிறது. தொடக்கத்தில் நண்பர்களாக இருந்த இருவரும் தற்போதெல்லாம் மைதானத்தில் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள்.

முக்கியமாக ஐபிஎல் சமயத்தில் இவர்களுக்கு இடையில் பல முறை கடுமையான மோதல் வந்து இருக்கிறது. கடந்த சீசனிலும் இவர்களுக்கு இடையில் சண்டை வந்தது.

சண்டை

சண்டை

கடந்த சீசனில் கூட பெங்களூர் ஹைதராபாத் போட்டியில் மணீஷ் பாண்டேவுக்கு ஆட தெரியாது என்று கூறி கோலி அவரை ஸ்லெட்ஜ் செய்தார். அந்த போட்டியில் பெங்களூர் அணியை மணீஷ் பாண்டே புரட்டி எடுத்தார். மணீஷ் பாண்டேவுக்கு இந்திய அணியில் கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற விமர்சனம் உள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

தொடர்ந்து முதல் தர போட்டிகளில் நன்றாக ஆடினாலும் மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை. மணீஷ் பாண்டேவுக்கு ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், ஆடும் அணியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு போட்டியில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

பதிலடி

பதிலடி

இந்த நிலையில் நேரம் பார்த்து தற்போது மணீஷ் பாண்டே கோலிக்கு தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்து உள்ளார். பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதபராத் அணியில் மணீஷ் பாண்டே விளாசிக்கொண்டு இருக்கிறார். ஓப்பனிங் வீரர் சாகா சீக்கிரம் அவுட் ஆன நிலையில் மணீஷ் பாண்டே விக்கெட் செல்வதை கட்டுப்படுத்தி மாஸ் காட்டினார்.

நிதானம்

நிதானம்

கொஞ்சம் நிதானம், தேவைப்படும் நேரங்களில் சிக்ஸ், பவுண்டரி என்று மணீஷ் பாண்டே திட்டமிட்டு பக்காவாக ஆடினார். அவசரப்பட்டு ஆடி அவுட் ஆகாமல் 100-110 ஸ்டிரைக் ரேட் மட்டுமே வைத்து இருந்தார். தற்போது வரை மணீஷ் பாண்டே 33 பந்தில் 34 ரன்கள் எடுத்துள்ளார். எப்போது பெங்களூர் என்று வந்தால் மணீஷ் சிறப்பாக ஆடுவார்.

சிறப்பு

சிறப்பு

இன்று பெங்களூர் அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை பயன்படுத்திக்கொண்டு, மணீஷ் பாண்டே இன்றும் பெங்களூருக்கு எதிராக நிதானமாக ஆடி பிரஷர் கொடுத்தார். ஒரு பக்கம் வார்னர் அதிரடி காட்ட இன்னொரு பக்கம் மணீஷ் பாண்டே விக்கெட் செல்வதை தடுத்து அறிவுபூர்வமாக ஆடினார். கோலியுடன் மோதி வரும் மணீஷ் பாண்டே நேரம் பார்த்து கோலிக்கு செக் வைத்துள்ளார்.

Story first published: Wednesday, April 14, 2021, 22:38 [IST]
Other articles published on Apr 14, 2021
English summary
IPL 2021: Manish Pandey played an intelligent innings for SRH against RCB
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+