எதுக்கு டெஸ்ட் மேட்ச் ஆடுறீங்க.. கடுப்பாக்கிய பேட்ஸ்மேன்.. டிரெஸ்ஸிங் ரூமில் நின்று கத்திய வார்னர்!
சென்னை: நேற்றும் அதற்கும் முந்தைய போட்டியிலும் ஹைதராபாத் அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது மணீஷ் பாண்டேதான் என்று ரசிகர்கள் புகார் வைத்து வருகிறார்கள்.
ஹைதராபாத் அணியில் ஆடி வரும் இளம் மிடில் ஆர்டர் வீரர் மணீஷ் பாண்டே. ஒவ்வொரு போட்டியிலும் பொறுப்பாக ஆடி வரும் இவர் 30+ ரன்களை எடுத்து வருகிறார்.
பல போட்டிகளில் இவர் அதிரடியாக ஆடி அரைசதம் கூட அடித்துள்ளார். ஆனாலும் ஹைதராபாத் அணி ஒவ்வொரு முறை தோல்வி அடையும் போதும் அதற்கு மணீஷ் பாண்டேதான் முக்கியமான காரணமாக மாறுகிறார்.

காரணம்
மணீஷ் பாண்டேவின் பிரச்சனை அவரை ஸ்டிரைக் ரேட்தான். மிகவும் நிதானமாக 100-110 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுவதை இவர் வழக்கமாக வைத்து உள்ளார். அதிலும் மிடில் ஓவர்களில் இவர் ரன்கள் அடிப்பது இல்லை. டெத் ஓவர்களில் மிக மோசமாக திணறுகிறார்.

வார்னர்
இவருடன் ஆடும் வார்னர் 160-180 ஸ்டிரைக் ரேட்டில் ஆடும் போது, மணீஷ் பாண்டே மட்டும் மிக மெதுவாக ஆடிக்கொண்டு இருக்கிறார். அதிலும் டெத் ஓவர்களில் சிக்ஸ், பவுண்டரி அடிக்க முடியாமல் திணறுகிறார். கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் இவர் சிக்ஸ் அடிக்க முடியாமல் டெத் ஓவர்களில் திணறியதே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

தோல்வி
நேற்றும் கூட மிடில் ஓவர்களில் சிக்ஸ், பவுண்டரி அடிக்க முடியாமல் மணீஷ் பாண்டே சிங்கிள் எடுத்தார். சமயங்களில் இவர் டெஸ்ட் போட்டி போல டொக் வைத்துக் கொண்டு இருந்தார். வார்னர் அவுட் ஆன பின் இவரால் மொத்தமாக ரன் ரேட் குறைந்து ஹைதராபாத் அணி சிக்கலுக்கு உள்ளாக்கியது. இவர்தான் நேற்று பிரஷரை ஏற்றியது.

பிரஷர்
நேற்று வார்னரும் கூட இவரின் ஆட்டத்தை பெவிலியனில் இருந்து பார்த்து கொண்டு இருந்தார். இவர் சிங்கிள் எடுத்ததை பார்த்து ஒருமுறை கோபமாக தலையில் கூட அடித்துக்கொண்டார். அதோடு இவர் அவுட்டான பின் பெவிலியனில் நின்றபடி கோபமாக வார்னர் கத்தினார். மணீஷ் பாண்டேவை ஹைதராபாத் அணியில் கோரிக்கைகள் எழ தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications