Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் ரோஹித்.. 20 வயது வீரரின் வாழ்க்கையை ஒரே நாளில் மாற்றிய மும்பை.. பின்னணியில் அந்த மிடில் மேன்

சென்னை: மும்பை அணிக்காக நேற்று களமிறங்கிய இளம் வீரர் மார்கோ ஜென்சன் தனது முதல் போட்டியிலேயே வலுவாக முத்திரை பதித்துள்ளார்.

நேற்று பெங்களூருக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்தாலும் கூட, அந்த அணியில் இருக்கும் வீரர்கள் பலர் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். முக்கியமாக கிறிஸ் லின், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் நன்றாக பேட்டிங் செய்தனர்.

அதேபோல் ராகுல் சாகர், டிரெண்ட் போல்டை தவிர மற்ற வீரர்கள் எல்லோரும் நேற்று சிறப்பாகவே பவுலிங் செய்தனர். மும்பை அணிக்காக அறிமுகம் ஆன மார்கோ ஜென்சன் எதிர்பார்த்ததை விட நேற்று சிறப்பாகவே ஆடினார்.

ஜென்சன்

ஜென்சன்

தென்னாப்பிரிக்கவை சேர்ந்த 20 வயதே ஆன இளம் வீரர் மார்கோ ஜென்சன். இவர் தென்னாப்பிரிக்காவில் லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான தென்னாப்பிரிக்க அணியில் ஆட தேர்வானாலும், இவருக்கு இன்னும் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

சர்வதேச போட்டிகளில் ஆடாத இளம் வீரர் ஜென்சன் நேற்று ரோஹித் மும்பை அணிக்காக களமிறங்கினார். மும்பையின் டி காக்தான் இந்த தேர்வில் மிடில் மேனாக செயல்பட்டு உள்ளார். டி காக் கொடுத்த ரெக்கமெண்டேஷன் காரணமாக ஜென்சனை ரோஹித் சர்மா அணியில் எடுத்தார் என்கிறார்கள்.

வாவ்

வாவ்

அதோடு இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு கிரிக்கெட் தொடர் ஆட சென்ற போது இந்திய அணிக்கு ஜென்சன் வலைப்பயிற்சியில் பவுலிங் செய்தார். அப்போது சிறப்பாக பவுலிங் செய்த ஜென்சன் கோலியின் விக்கெட்டை எடுத்தார். ஸ்லோ பால் பவுன்சர் தொடங்கி யார்க்கர் வரை அதிரடியாக வீசி ஜென்சன் அசத்தினார்.

சிறப்பு

சிறப்பு

அப்போதே இவர் மீது கண் வைத்த ரோஹித் இரண்டு வருடம் கழித்து மும்பை அணியில் நேற்று அறிமுகப்படுத்தினார். மும்பை அணிக்காக இவர் ஆடிய முதல் போட்டியிலேயே அசத்தி உள்ளார். நேற்று முதல் ஓவரை இவர் கொஞ்சம் சரியாக வீழ்த்தவில்லை என்றாலும் அடுத்த மூன்று ஓவர்களில் அசத்தினார்.

விக்கெட்

விக்கெட்

நான்கு ஓவர் வீசிய ஜென்சன் வெறும் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். நேற்று போல்டை விட இவர் சிறப்பாக வீசினார். முதல் போட்டியிலேயே ஜென்சனின் வாழ்க்கை மாறியுள்ளது.

உயரம்

உயரம்

6.8 அடி உயரம் இருக்கும் ஜென்சன் தனது உயரத்தை பயன்படுத்தி எளிதாக பவுன்சர் வீசுகிறார். சர்வதேச போட்டிகளில் ஆடாமல் இவர் நேற்று ஐபிஎல்லில், அதிலும் இந்திய மண்ணில் கவனிக்கத்தக்க வகையில் பவுலிங் செய்தார். ஐபிஎல்லில் இவரின் திறமையான ஆட்டத்தால் விரைவில் தென்னாபிரிக்க அணியிலும் இவருக்கு ஆட வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

Story first published: Saturday, April 10, 2021, 17:36 [IST]
Other articles published on Apr 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+