Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியையே திணறடித்தவர்.. வெறும் 20 வயசு தென்னாப்பிரிக்க வீரரை களமிறக்கிய ரோஹித்.. ப்பா மாஸ்டர்பிளான்!

சென்னை: தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 20 வயது இளம் வீரர் ஒருவர் இன்று மும்பை அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். தென்னாபிரிக்க தேசிய அணியிலேயே இதுவரை இவர் ஆடாத நிலையில் இன்று மும்பை அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. இதில் மும்பைக்கு எதிராக பெங்களூர் அணி டாஸ் வென்றது.

டாஸ் வென்ற கோலி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதில் மும்பை அணியில் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை

மும்பை

இந்த போட்டியில் மும்பை அணியில் டி காக் இடம்பெறவில்லை. கொரோனா குவாரண்டின் காரணமாக இவர் அணியில் இடம்பெறவில்லை. இவருக்கு பதிலாக கிறிஸ் லைன் இன்று பேட்டிங் இறங்குகிறார்.

தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா

இன்னொரு பக்கம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 20 வயது இளம் வீரர் மார்கோ ஜென்சன் இன்று மும்பை அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முதல் தர வீரர் ஆவார். இதுவரை சர்வதேச போட்டிகளில் இவர் ஆடியது இல்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

தென்னாப்பிரிக்க பாகிஸ்தான் இடையிலான சர்வதேச தொடரில் தேர்வானாலும் கூட இவருக்கும் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர்களில் மார்கோ ஜென்சன் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பவுலிங் செய்துள்ளார். இதில் சிறப்பாக அவர் பவுலிங் செய்தார்.

மார்கோ ஜென்சன்

மார்கோ ஜென்சன்

இந்த பயிற்சி ஆட்டங்களில் எல்லாம் கோலியை பல முறை மார்கோ ஜென்சன் விக்கெட் எடுத்துள்ளார். முக்கியமாக கோலி இவரின் பவுலிங்கில் கடுமையாக திணறி உள்ளார். கோலியை குறி வைத்து இவரை அணியில் எடுத்து இருக்கலாம் என்கிறார்கள். இதனால் தற்போது மார்கோவை ரோஹித் அணியில் எடுத்துள்ளார். இவருக்கு வெறும் 20 வயதுதான் ஆகிறது.

சிறப்பு

சிறப்பு

இவரின் உயரம் 6.8 அடி ஆகும். முதல் தர போட்டிகளில் மட்டும் ஆடியவரை நம்பி ரோஹித் எடுத்துள்ளார். 2 வருடமாக மார்கோ ஜென்சனை பாலோ செய்து, அவரின் திறமையை கண்டறிந்து அணியில் எடுத்துள்ளதாக மும்பை அணி நிர்வாகம் கூறியுள்ளது. இன்று பெங்களூருக்கு எதிராக இவருக்கு சர்ப்ரைஸ் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, April 9, 2021, 19:37 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+