போட்டியே நடக்காது.. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஷாக் கொடுத்த ஐபிஎல் நிர்வாகம்.. எதிர்பாராத டிவிஸ்ட்!
மும்பை: 2021 ஐபிஎல் தொடர் மும்பையில் நடப்பது சந்தேகம் என்று தகவல்கள் வருகிறது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது. இந்த வருடம் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடக்க உள்ளது .
வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி 6 வீரர்களை எடுத்தது.மும்பை அணியும் சில சில மாற்றங்களை செய்துள்ளது.

எங்கு நடக்கும்
இந்தியாவில் எங்கெல்லாம் இந்த போட்டிகள் நடக்கும் என்று ஆலோசனைகள் நடந்து வருகிறது. தேர்தல் மற்றும் கொரோனாவிற்கு இடையே போட்டிகள் நடப்பதால் அதற்கு ஏற்றபடி மைதானங்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான மைதானத்தில் மட்டுமே இந்த போட்டிகள் நடக்க உள்ளது.

சென்னை
சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூர், டெல்லி ஆகிய மைதானங்களில் போட்டி நடக்கும் என்று கூறப்படுகிறது. 2021 ஐபிஎல் தொடர் மும்பை நடப்பது சந்தேகம் என்று தகவல்கள் வருகிறது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது.

கொரோனா
மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகமாக பதிவாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் மகாராஷ்டிராவில் 5000க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு மீண்டும் லாக்டவுன் கொண்டு வரும் எண்ணத்தில் மஹாராஷ்டிரா அரசு உள்ளது.

பாதுகாப்பு
அங்கு இதனால் இரண்டாவது அலை ஏற்பட்டுவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி மும்பை ஐபிஎல் போட்டிகள் நடக்காமல் போகலாம் என்கிறார்கள். இது கண்டிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக திரும்பும்.

மும்பை
மும்பை, புனேவில் போட்டிகள் நடக்கவில்லை என்றாலே ஹோம் கிரவுண்ட் அம்சத்தை மும்பை அணி இழக்கும். இது போட்டியின் போது மும்பை அணிக்கு எதிராக திரும்பும். மும்பை மைதானம் இத்தனை நாள் அந்த அணிக்கு ஆதரவாக இருந்த நிலையில் இந்த வருடம் மும்பை மைதானத்தில் எம்ஐ அணி ஆட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications