
ஓப்பனிங்
டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்கமே அதிரடி காத்திருந்தது. ஓப்பனிங் களமிறங்கிய மயங்க் அகர்வால் - கே.எல்.ராகுல் ஜோடி முதல் ஓவர் முதலே அதிரடி காட்டினர்.

அதிரடி
சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 5 ஓவர்களில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தது. அதே போல் பவர் ப்ளேவின் முடிவில் 59 ரன்கள் சேர்ந்தது. இவர்களை பிரிக்க முடியாமல் திணறிய டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ரன்களை வாரி வழங்கினர்.

பஞ்சாப் அணிக்கு அதிர்ஷ்டம்
ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே ராகுல் அவுட்டாக வாய்ப்பிருந்தது. ஆனால் ஸ்மித் கேட்சை தவறவிட்டதால் பஞ்சாப் கிங்ஸ் அணியில் முதல் விக்கெட்டிற்கு 122 ரன்கள் சேர்ந்தது. சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அதே போல் கே.எல்.ராகுல் 61 ரன்கள் விளாசினார்.

கடின இலக்கு
இதனையடுத்து களமிறங்கிய கெயில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா (22) நிக்கோலஸ் பூரண் (9), ஷாருக்கான் (15) ரன் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.


Click it and Unblock the Notifications











