Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுண்டரி, சிக்ஸர் என அனைத்திலும் சாதனை...பொல்லார்டுக்கு அடித்த ஜாக்பாட்! ஒரு விஷயம் செய்தால் போதும்

சென்னை: இன்றைய போட்டியில் ஒரே ஒரு விஷயத்தை செய்தால் மும்பை இந்தியன்ஸ் வீரர் பொல்லார்ட் மிகப்பெரும் மைல்கல்லை எட்டுவார்.

இந்தாண்டுகான ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிக்ஸர் மழை பொழிந்தால் கெயில், டிவில்லியர்ஸ் ஆகியோர் செய்த சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ளது.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் பொல்லார்ட் ஐபிஎல்-ல் இதுவரை 164 போட்டிகளில் ஆடி 198 சிக்ஸர்களை விளாசியுள்ளார். எனவே இன்றைய போட்டியில் இன்னும் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டால் 200 சிக்ஸர்களை கடந்த வீரர் என்ற மைல்கல்லை எட்டுவார். இதற்கு முன்னர் கெயில் (349) டிவில்லியர்ஸ் (235), எம்.எஸ்.தோனி (216), ரோகித் சர்மா (213), விராட் கோலி (201) உள்ளிட்டோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.

பவுண்டரி சாதனை

பவுண்டரி சாதனை

பொல்லார்ட் இன்னும் 4 பவுண்டரிகளை அடித்தால் ஐபிஎல் தொடரில் 200 பவுண்டர்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார். அவர் இன்னும் 22 பவுண்டரிகள் அடித்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரை சேர்த்து 250 பவுண்டர்களை நிறைவு செய்வார். அதே போல அனைத்து வகை டி20 போட்டிகளையும் சேர்த்து 700 பவுண்டரிகளை கடக்க பொல்லார்டுக்கு இன்னும் 25 பவுண்டரிகள் தேவை.

ஆல்ரவுண்டர் சாதனை

ஆல்ரவுண்டர் சாதனை

டி20 போட்டிகளில் 300 விக்கெட்களை கடக்க கெயிரன் பொல்லர்டுக்கு இன்னும் 7 விக்கெட்களே தேவை. டி20ல் 300க்கும் அதிகமான விக்கெட்கள் மற்றும் 5000க்கும் அதிகமான ரன்கள் அடித்த 4வது ஆல்ரவுண்டராகவும் பொல்லார்ட் ஆவார். இதற்கு முன்னர் டுவைன் பிராவோ, சகிப் ஹல் ஹசன், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் இதனை செய்துள்ளனர். அதே போல அவர் இன்னும் 10 கேட்ச்கள் பிடித்தால் ஐபிஎல்-ல் 100 கேட்சை எட்டுவார்.

பொல்லார்ட்

பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிடில் ஆர்டரில் மிகப்பெரும் பலமாக இருந்து வருகிறர் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் கெயிரன் பொல்லார்ட். ஆட்டத்தின் கடைசி ஓவர்களிலும் சரி, அணி சரிவில் இருக்கும் போதும் சரி கெயில் அதிரடியாக ஆடி அணியை மீட்க தவறுவதில்லை. இதுவரை ஐபிஎல்-ல் இவர், 3023 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் இந்தாண்டும் நல்ல ஃபார்மில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, April 9, 2021, 17:26 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+