For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரசிகர்களுக்கு ஆச்சரியம் தந்த ப்ளேயிங் 11.. அதிக புது வீரர்களுடன் களமிறங்கிய மும்பை - ஆர்சிபி!

சென்னை: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ரசிகர்கள் எதிர்பாராத பல்வேறு மாற்றங்களுடன் இரு அணிகளும் களமிறங்கியுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி - பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என இரு அணிகள் சம பலத்துடன் தங்களது ப்ளேயிங் 11ஐ களமிறக்கியுள்ளது. இந்நிலையில் அதிகப்படியான புதுமுக வீரர்களுக்கு இரு அணிகளிலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

கடந்த முறை அயல்நாட்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மிகுந்த பாதுகாப்புடன் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னை பிட்ச் பேட்டிங்கிற்கு சற்று சிரமமாக இருக்கும் என்பதால் 2வதாக பேட்டிங் செய்யும் அணிக்கு போட்டி எளிதாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்தே விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது தெரிகிறது.

மும்பை ப்ளேயிங் 11

மும்பை ப்ளேயிங் 11

மும்பை இந்தியன்ஸ் அணியின் வழக்கமான ப்ளேயிங் 11ல் இருந்து 2 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொடக்க வீரர் குயிண்ட டிக்காக் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக கிறிஸ் லின், ரோகித் சர்மாவுடன் களமிறங்குகிறார். அதே போல பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ ஜேன்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ப்ளேயிங் 11 : ரோகித் சர்மா, கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, பொல்லர்ட், க்ருணால் பாண்டியா, ராகுல் சஹார், மார்கோ ஜேன்சன், ட்ரெண்ட் போல்ட், பும்ரா

 ஆர்சிபி ப்ளேயிங் 11

ஆர்சிபி ப்ளேயிங் 11

பெங்களூரு அணியில் கடந்த முறை சிறப்பாக விளையாடி தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் கொரோனாவில் இருந்து மீண்ட போதும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் ஓப்பனிங் விராட் கோலியுடன் புது வீரர் ராஜத் பட்டிதர் களம் காணுகிறார். அதே போல் ஆர்சிபி அணியால் அதிகபட்சமாக ரூ.15 கோடிக்கு வாங்கப்பட்ட கெயில் ஜேமிசன், 14.25 கோடிக்கு வாங்கப்பட்ட மேக்ஸ்வெல் மற்றும் டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் ப்ளேயிங் 11ல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ப்ளேயிங் 11: விராட் கோலி, ராஜத் பட்டிதர், டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், வாசிங்டன் சுந்தர்,கெயில் ஜேமிசன், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், சபாஷ் அஹ்மது, முகமது சிராஜ்

கடும் போட்டி

கடும் போட்டி

இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2013ன் ஆண்டு முதல் ஒரு முறை கூட தொடக்க போட்டியில் வெற்றி பெறவில்லை. இதனால் இந்த முறை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. ஆர்சிபி அணியில் அதிகபடியான புது வீரர்கள் களமிறங்குவதால் இது அந்த அணிக்கு சிக்கலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி மும்பை அணி 17 முறை வென்றுள்ளது. ஆர்சிபி 9 முறை வென்றுள்ளது.

Story first published: Friday, April 9, 2021, 20:24 [IST]
Other articles published on Apr 9, 2021
English summary
MI and RCB Gave a chances for new recruits in first match of IPL 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+