Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றி கூட முக்கியமில்லை.. ஆனால் அது முக்கியம்..முனைப்பு காட்டும் மும்பை - ராஜஸ்தான்.. என்ன காரணம்

சார்ஜா: மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் ஒரு விஷயத்தை செய்ய வேண்டியது மிக முக்கியமானதாக உள்ளது.

ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டமான இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வாழ்வா? சாவா? போட்டியாக மோதுகின்றன.

இந்த போட்டியில் சார்ஜாவில் உள்ள மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டி புள்ளிப்பட்டியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியாகியுள்ளது.

இன்றைய ஆட்டம்

இன்றைய ஆட்டம்

அதாவது புள்ளிப்பட்டியலை பொறுத்தவரையில் சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ், ஆர்சிபி அணிகள் ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. ஆனால் 4வது இடத்திற்கான போர் மட்டும் இன்னும் நீடித்து வருகிறது. அதுவும் ஒரு இடத்திற்கு 4 அணிகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடனும் அதிக ரன் ரேட்டுடனும் 4வது இடத்தில் தற்போது நீடித்து வருகிறது. ஆனால் அடுத்து வரக்கூடிய போட்டியில் கொல்கத்தா தோல்வியடைந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும்.

முக்கியமான போட்டி

முக்கியமான போட்டி

ஏனென்றால் மும்பை, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் உள்ளன. இதில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளுமே தற்போதுவரை 12 போட்டிகளில் 5 வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் இரு அணிகளும் 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ளன. ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க வேண்டும் என்றால் இந்த இரண்டு அணிகளுமே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும். தோல்வியடைந்தால், தொடரில் இருந்து வெளியேறும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதனால் இன்றைய போட்டியில் நிச்சயம் கடும் போராட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெற்றால் மட்டும் போதாது, அதோடு சேர்த்து முக்கியமான ஒன்றையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதாவது அணியின் ரன் ரேட்டை இந்த போட்டியிலேயே அதிகரிக்க வேண்டும். ஏனென்றால் ராஜஸ்தான், மும்பை அணிகளை விட புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் அதிக ரன்ரேட்டை கொண்டுள்ளது. இதனால் அவர்களுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளன.

முக்கியமான செயல்

முக்கியமான செயல்

இதனால், இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து அதிக இலக்கு வைக்க வேண்டும். மேலும் 2வதாக பேட்டிங் செய்யும் அணியை 130 ரன்களுக்குள் சுருட்டியே ஆக வேண்டும். இதே போல முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் அணியானது எதிரணியை 120 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். அப்படி சுருட்டிவிட்டாலும், அந்த இலக்கை 13 ஓவர்களில் துரத்தி மிகப்பெரும் வெற்றியை தனதாக்க வேண்டும்.

எதுவும் நடக்காவிட்டால்

எதுவும் நடக்காவிட்டால்

இப்படி ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால், புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணியை விட ரன் ரேட் உயரும். எனவே அடுத்த போட்டியில் தோல்வியை தழுவினால் கூட ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கும். இதனை செய்ய தவறிவிட்டால் அடுத்து வரக்கூடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா சுலபமாக ப்ளே ஆஃப்-க்குள் நுழைந்துவிடும். எனவே இன்றைய போட்டியில் அதிரடி நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, October 5, 2021, 17:36 [IST]
Other articles published on Oct 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+