Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி சாத்தியம்’ மும்பையின் அசரவைக்கும் ஐபிஎல் வரலாறு..புள்ளிவிவர புலி

அமீரகம்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அதிக ரன் வித்தியாசத்தில் வெல்ல முடியும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் 14ஆவது சீசனின் கடைசி கட்ட லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றுள்ளது.

எஞ்சியுள்ள ஒரு இடத்தையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது.

மும்பை கடும் போட்டி

மும்பை கடும் போட்டி

கொல்கத்தா அணி தற்போது 14 புள்ளிகள் மற்றும் +0.587 என்ற நெட் ரன் ரேட்டுடன் 4வது இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகள் மற்றும் -0.048 என்ற ரன்ரேட்டுடன் 6வது இடத்தில் உள்ளது. மும்பை இன்று தனது கடைசி லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதில் மும்பை அதிக ரன்ரேட்டுடன் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும்.

மும்பை செய்ய வேண்டியவை

மும்பை செய்ய வேண்டியவை

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை விட அதிக ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற வேண்டும். அதாவது மும்பை அணி முதலில் களமிறங்கினால் கண்டிப்பாக 200 ரன்களுக்கு மேலாக இலக்கு நிர்ணயிக்க வேண்டும். மேலும் ஐதராபாத் அணியை 170 ரன்கள் வித்தியாசத்தில் நிச்சயம் வீழ்த்த வேண்டும். அப்படி வீழ்த்தினால் மட்டுமே மும்பை அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியும். இதற்கு சாத்தியமே இல்லையென ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

ஆனால் மும்பை இந்தியன்ஸ் இந்த விஷயத்தையும் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என ஐபிஎல் வரலாற்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் தற்போது வரை அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளில் மும்பை முதலிடத்தில் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மும்பை - டெல்லி அணிகள் மோதிய போட்டியில் மும்பை அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி 212 ரன்கள் குவிக்க, 2வதாக ஆடிய டெல்லி அணி 66 ரன்களுக்கு சுருண்டது.

புதிய சரித்திரம்

புதிய சரித்திரம்

இதே போல கடந்த 2018ம் ஆண்டு 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியுள்ளது. எனவே இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப ஐதராபாத் அணியையும் மும்பை அணி வீழ்த்திவிட்டால், அது ஐபிஎல் வரலாற்றில் புதிய சரித்திரம் தான்.

Story first published: Friday, October 8, 2021, 21:40 [IST]
Other articles published on Oct 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+