Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேரத்தில் வந்த ஸ்பெஷலிஸ்ட் வீரர்.. டாஸ் வென்ற மும்பை அணி.. ரோகித் கொடுத்த சூப்பர் டிவிஸ்ட்

அபுதாபி: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் மும்பை - ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் ஆட்டம் அபுதாபியில் தொடங்கியது.

மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

கொல்கத்தா அணி தற்போது 14 புள்ளிகள் மற்றும் +0.587 என்ற நெட் ரன் ரேட்டுடன் 4வது இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகள் மற்றும் -0.048 என்ற ரன்ரேட்டுடன் 6வது இடத்தில் உள்ளது. மும்பை இன்று தனது கடைசி லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 170 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். பந்துவீச்சை தேர்வு செய்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு மிக கடினமானதாக மாறிவிடும்.

மும்பை மாற்றங்கள்

மும்பை மாற்றங்கள்

இதனால் இந்த போட்டியில் டாஸின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த முக்கிய போட்டிகாக மும்பை அணி 2 முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது அந்த அணி. அதாவது பேட்டிங்கில் மும்பை அணியில் எந்தவித மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை. ஓப்பனிங்கிற்கு டிகாக் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது நடைபெறவில்லை.

பியூஸ் சாவ்லா

பியூஸ் சாவ்லா

அதற்கு மாறாக பந்துவீச்சில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சௌரப் திவாரிக்கு பதிலாக க்ருணால் பாண்ட்யா மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இதே போல ஜெயந்த் யாதவ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ப்யூஸ் சாவ்லா களமிறக்கப்படுகிறார். ஐபிஎல்-ல் அதிக அனுபவம் வாய்ந்த பியூஸ் சாவ்லா, மும்பை அணிக்காக விளையாடும் முதல் போட்டி இதுவாகும். எனவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மும்பை ப்ளேயிங் 11

மும்பை ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லர்ட், க்ருணால் பாண்ட்யா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கோல்டர் நைல், பும்ரா, பியூஸ் சாவ்லா, ட்ரெண்ட் போல்ட்

இதே போல ஐதராபாத் அணியிலும் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சனே வெளியேறியுள்ளார். காயம் காரணமாக அவர் உட்காரவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போட்டிக்கு கேப்டனாக மணிஷ் பாண்டே நியமிக்கப்பட்டிருக்கிறார். இதே போல புவனேஷ்வர் குமாரும் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

ஐதராபாத் ப்ளேயிங் 11

ஐதராபாத் ப்ளேயிங் 11

ஜேசன் ராய், அபிஷேக் ஷர்மா, மணிஷ் பாண்டே, ப்ரியம் கார்க், அப்துல் சமாத், சாஹா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், முகமது நபி, உம்ரன் மாலிக், சிதார்த் கவுல்

Story first published: Friday, October 8, 2021, 21:42 [IST]
Other articles published on Oct 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+