Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் அவருக்கு அந்த வாய்ப்பு இல்லை.. கொந்தளித்த மைக்கேல் வாகன்.. ராஜஸ்தான் தோல்விக்கு இதுதான் காரணமா?

சென்னை: ராஜஸ்தான் அணியில் ஒரு மூத்த வீரரை தவறாக பயன்படுத்தியதால் அந்த அணி மீது முன்னாள் வீரர் காட்டம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கிட்டத்தட்ட போட்டியின் வெற்றி ராஜஸ்தான் அணியிடம் சென்ற நிலையில் பஞ்சாப் அணி வென்றதால் ரசிகர்கள் பலரும் வியப்படைந்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஆட்டம்

ஆட்டம்

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டாகியும், மன்னன் வோஹ்ரா 5 ரன்கள் எடுத்தும் அதிர்ச்சியளித்தனர். அதன் பின்னர் களமிறங்கிய மற்ற வீரர்களும் பெரிய அளவில் சோபிக்காத நிலையில் கேப்டன் சஞ்சு சாமசன் 119 ரன்கள் அடித்து ஒற்றை ஆளாக போராடினார். எனினும் அந்த அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

வாகன் கோபம்

வாகன் கோபம்

ராஜஸ்தான் அணியின் தோல்வி குறித்து பேசியுள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன், ராஜஸ்தான் அணி ஜாஸ் பட்லரை கீப்பராக பயன்படுத்தவில்லை. பட்லர் ஸ்டம்ப்புகளுக்கு பின்னால் நின்றால் மிகவும் முக்கிய நபராக அணிக்கு ஆட்டத்தில் விலங்குவார். ஆனால் ஏன் ராஜஸ்தான் ஆணி பட்லரை கீப்பிங் செய்யவைக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

சர்வதேச டி20 போட்டிகளில் ஜாஸ் பட்லர் ஓப்பனிங் களமிறங்கி சிறப்பாக ஆடுபவர். ஆனால் நேற்றைய போட்டியில் அவர் 4வது வீரராக களமிறங்கினார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் மன்னன் வோஹ்ரா ஓப்பனிங் களமிறங்கி சொதப்பினர். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள வாகன், என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? பட்லரை ஏன் ஒப்பனிங்கிற்கு களமிறக்கவில்லை என கேட்டுள்ளார்.

பட்லரை

பட்லரை

பட்லர் விஷயத்தில் கரார் காட்டிய வாகன், ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சனை பாராட்டவும் மறக்கவில்லை. இதுகுறித்த அவரது ட்வீட்டில், ஐபிஎல் இன்னிங்ஸில் மிகச்சிறந்த ஒன்று இது என புகழ்ந்துள்ளார். உலகின் அனைத்து டி20 தொடர்களிலும் ஐபிஎல்-ஐ போல விறுவிறுப்பு தரமுடியாது. எனவிம் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, April 13, 2021, 17:10 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+