ஈகோவை சீண்டிய விமர்சனம்.. அட நம்ம தல தோனியா இது? மறுபடியும் அப்படியே வந்துட்டாரே..வைரலாகும் போட்டோ!
சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தற்போது மீண்டும் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள தொடங்கி இருப்பதாக தகவல்கள் வருகிறது.
2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த வாரம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சென்னையில் இந்த ஏலம் நடப்பதால் முன்பை விட இந்த முறை ஐபிஎல் ஏலம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி குறி வைக்க போகும் வீரர்கள் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக சிஎஸ்கே எடுக்க போகும் வெளிநாட்டு வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

பயிற்சி
சிஎஸ்கே அணியில் தற்போது இருக்கும் வீரர்கள் பலர் பயிற்சி இன்றி இருக்கிறார்கள்.பிராவோ பயிற்சி இன்றி இருக்கிறார். அதேபோல் தோனி, அம்பதி ராயுடு, ரெய்னா, உத்தப்பா என்று மூன்று வீரர்கள் பயிற்சி இன்றி இருக்கிறார்கள். சிஎஸ்கே வீரர்கள் பலர் கடந்த 2 வருடமாக கிரிக்கெட்டே ஆடவில்லை.

கிரிக்கெட்
தோனியும் கூட கிரிக்கெட் மீது கவனம் செலுத்தலாம் கடந்த சில மாதங்களாக விவசாயம் மீது கவனம் செலுத்தி வருகிறார். இவர் போதிய அளவு உடற்பயிற்சி இன்றி இவர் உடல் எடை கூடி மோசமாக காணப்பட்டார். போதிய கிரிக்கெட் பயிற்சியும் இவருக்கு இல்லை,

எப்படி
இதனால் இணையத்தில் தோனிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இவர் ஏன் இன்னும் கிரிக்கெட் விளையாடுகிறார். இவரின் லுக் ஏன் இப்படி ஆகிவிட்டது. கிரிக்கெட் மீது கவனம் செலுத்தவில்லை என்றால் இவர் எப்படி சிஎஸ்கே அணியை வழி நடத்துவார் என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இணையம்
இணையத்தில் இப்படி தனக்கு எதிராக வந்த விமர்சனங்களை தோனி பர்சனலாக எடுத்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த விமர்சனங்களை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.இதனால் கடந்த இரண்டு வாரமாக தோனி தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

பயிற்சி
தீவிரமாக இவர் கடந்த இரண்டு வாரமாக பேட்டிங் பயிற்சி செய்துள்ளார். அதேபோல் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டு உள்ளார். இவரின் புதிய லுக் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. மைதானத்தில் நிற்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

போட்டோ
ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் தோனி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. இதில் எப்படியாவது பார்மிற்கு திரும்ப வேண்டும் என்று தோனி உறுதியாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications