என்ன இவர்தான் ஓப்பனிங்கா?.. ரொம்ப ரிஸ்க் ஆச்சே.. இளம் வீரரை அறிமுகப்படுத்தும் கோலி.. செம துணிச்சல்
சென்னை: பெங்களூர் அணியில் இந்த வருடம் இளம் வீரர் ஒருவர் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகின்றன.
ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கோலி இருக்கிறார். இத்தனை வருடமாக கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற கறை பெங்களூர் அணி மீது உள்ளது. இதை எப்படியாவது போக்க வேண்டும் என்று கோலி உறுதியாக உள்ளார்.
இதற்காகத்தான் ஐபிஎல் 2021 ஏலத்தில் தரமான வீரர்களை கோலி தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டின் உள்ளிட்ட பல தரமான வீரர்கள் இதனால் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பெங்களூர்
இந்த சீசனில் பெங்களூர் அணியில் கேரளாவை சேர்ந்த அசாருதீன் இடம்பெற்றுள்ளார். இவருக்கு 26 வயதாகிறது . இளம் வீரரான அசாருதீன் கடந்த சையது முஷ்டாக் கோப்பையில் சிறப்பாக ஆடினார். இவர் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆவார்.

எப்படி
கடந்த சையது முஷ்டாக் கோப்பையில் 40 பந்துகளில் அசாருதீன் அடித்த சதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இவரின் சிறப்பான ஆட்டம் தேசிய அளவில் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து கோலி இவரின் ஆட்டத்தை பார்த்து அசந்து போய் பெங்களூர் அணியில் 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்டார்.

வாய்ப்பு
இந்த நிலையில் பெங்களூர் அணியில் இவர் ஓப்பனிங் இறங்குவார் என்று கூறப்படுகிறது. இந்த முறை அணியில் ஆரோன் பின்ச் இல்லை. ஒரு பக்கம் படிக்கல் ஓப்பனிங் இறங்குவார். இன்னொரு பக்கம் அசாருதீனை கோலி களமிறக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இரண்டு இளம் வீரர்களும் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ரிஸ்க்
இது பெரிய ரிஸ்க் என்றாலும் ஒரு சில போட்டிகளில் அசாருதீன் படிக்கல் இரண்டு பேரும் ஓப்பனிங் இறங்குவார்கள். மற்ற போட்டிகளில் கோலி ஓப்பனிங் இறங்கி, அசாருதீன் அதன்பின் ஒன் டவுன் இறங்குவதுதான் பிளான் என்று கூறப்படுகிறது. அதேபோல் பெங்களூர் அணியில் மேக்ஸ்வெல் இருக்கிறார்.

மாற்றம்
இவர் 4-5 இடங்களில் மாறி மாறி களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. போன சீசன்களை விட பெங்களூர் அணி இந்த சீசனில் மிகவும் வலிமையான அணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications