ஆஸ்திரேலிய தொடர்
ஆனால் அதன்பின் நடந்த ஆஸ்திரேலிய தொடரில்தான் சிராஜ் மொத்தமாக மாறினார். பும்ரா காயத்தோடு வெளியேற இந்திய அணியின் பவுலிங்கை சிராஜ்தான் வழி நடத்தினார். அந்த தொடரில் சிராஜ்தான் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தார். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த சிராஜ் முக்கிய காரணமாக இருந்தார்.
காரணம்
ஒரே மாதத்தில் மோசமான வீரர் என்ற பெயரில் இருந்து சிராஜ் நம்பிக்கை நட்சத்திரம் என்ற உயரத்திற்கு சென்றார். ஆனால் அப்போதும் கூட இவர் டெஸ்ட் வீரர், ஐபிஎல்லில் மீண்டும் சொதப்புவார் பாருங்கள் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் 2021 ஐபிஎல்லில் பெங்களூர் ஆடிய இரண்டு போட்டிகளிலும் அந்த அணிக்காக சிறப்பாக பவுலிங் செய்தது சிராஜ்தான்.
சிராஜ்
துல்லியமான லென்த், லைன், பல வெரியேஷன்கள் என்று சிராஜ் எதிர்பார்க்காத மாற்றத்தை தனது பவுலிங்கில் காட்டி வருகிறார். அதிலும் நேற்று போட்டியில் இவர் 144, 145 கிமீ வேகத்தில் அடுத்தடுத்து பவுலிங் செய்து அதிர வைத்தார். பும்ரா, ஷமியே 142 கிமீ வேகத்தை தாண்டாத நிலையில் சிராஜ் அசால்ட்டாக 145 கிமீ வேகத்தை தாண்டி பவுலிங் செய்கிறார்.
கம்பேக்
நேற்று போட்டியில் முதல் ஓவரில் இவர் ரன் எதுவும் கொடுக்கவில்லை. அவர் வீசிய இரண்டாவது ஓவரில் வெறும் 2 ரன் மட்டுமே கொடுத்தார். இவரின் பந்தை தொட கூட முடியாமல் ஹைதராபாத் வீரர்கள் நேற்று திணறினார்கள். டெத் ஓவர்களில் சிராஜ் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பவர் பிளேவில் சிராஜ்தான் பெஸ்ட் பவுலர்.
சீசன்
இந்த சீசனில் பவர் பிளேவில் குறைந்த ரன் கொடுத்த வீரர் சிராஜ்தான். 2020 ஐபிஎல் சீசனில் மோசமாக பவுலிங் செய்த சிராஜ் இந்த வருடம் எதிர்பார்க்காத கம்பேக்க்கை கொடுத்துள்ளார். 2021 சீசனில் பெங்களூர் அணியின் முக்கியமான பவுலராக சிராஜ் உருவெடுத்துள்ளார்.