Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

000001.. ஐபிஎல் வரலாற்றில் மிக சிறப்பான ஓவரை வீசிய சிராஜ்.. மிரண்டு போன ரசல்.. எப்படி சாத்தியமானது?

சென்னை: ஐபிஎல் வரலாற்றில் தனது மிக சிறப்பான ஓவரை நேற்று முகமது சிராஜ் பெங்களூர் அணிக்காக வீசினார்.

Recommended Video

IPL வரலாற்றில் மிக சிறப்பான ஓவரை வீசிய Mohamed Siraj.. கொண்டாடும் ரசிகர்கள்

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பெங்களூர் அணி திரில் வெற்றிபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தாவிற்கு எதிராக ஆர்சிபி 20 ஓவருக்கு 204/3 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டும் எடுத்து கொல்கத்தா தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பு

சிறப்பு

இந்த போட்டியில் முதல் 2 ஓவர்களை சிராஜ் சரியாக வீசவில்லை. கடந்த இரண்டு போட்டிகளாக சரியாக பவுலிங் செய்து வந்த சிராஜ், நேற்று நடந்த போட்டியில் முதல் 2 ஓவர்களில் கொஞ்சம் திணறினார். சரியான லைன் மற்றும் லென்த் கிடைக்காமல் சிராஜ் கொஞ்சம் கஷ்டப்பட்டார்.

எத்தனை

எத்தனை

இவர் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் மொத்தம் 16 ரன்கள் கொடுத்தார். ஒரு ஓவருக்கு 8 ரன்கள் வீதம் கொடுத்தார். விக்கெட்டும் எடுக்கவில்லை. துல்லியமான லைனில் பவுலிங் செய்ய முடியாமல் இவர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தார்.

ஆனால்

ஆனால்

ஆனாலும் இவரை நம்பி கோலி 19வது ஓவரை கொடுத்தார். அந்த ஓவரில் சிராஜ் செய்த சம்பவம்தான் தரமானது. ரசல் முழு பார்மில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். 14 பந்தில் 30 ரன்கள் எடுத்து ரசல் களத்தில் நின்று கொண்டு இருந்தார். இதனால் கண்டிப்பாக ரசல் சிராஜ் ஓவரை பறக்கவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ரசல்

ரசல்

ஏனென்றால் ஏற்கனவே முந்தைய ஐபிஎல் தொடர்களில் ரசல் சிராஜ் ஓவரை சிக்ஸர்களுக்கு பறக்க விட்டு இருக்கிறார். சின்னசாமி மைதானத்தில் பல முறை சிராஜ் பவுன்சர் வீச ரசல் சிக்ஸ், பவுண்டரி என்று வானவேடிக்கை காட்டியுள்ளார். ஆனால் நேற்று சிராஜ் வேறு திட்டத்தோடு வந்திருந்தார்.

சிராஜ்

சிராஜ்

நேற்று சிராஜ் வேறு திட்டத்தோடு வந்திருந்தார். ரசல் வைட் யார்க்கர் போட்டால் அடிக்க மாட்டார் என்பதால் வரிசையாக 3 வைட் யார்க்கர் பந்துகளை வீசினார். முழுக்க முழுக்க ஆப் சைடில் பீல்டர்களை நிற்க வைத்து, வைட் யாரிக்கர்களை ஆப் சைடில் வீசினார். இதை சுத்தமாக ரசலால் அடிக்க முடியவில்லை.

ஸ்டிரைக்

ஸ்டிரைக்

அதிகபட்சம் ரசல் முயன்றால் பவுண்டரிதான் அடிக்க முடியும். ஆனால் அதை தடுக்கவும் ஆப் சைட் முழுக்க பீல்டர்கள் நின்றனர். இன்னொரு பக்கம் ரசல் சிங்கிள் ஓடும் முடிவில் இல்லை. இதை தெரிந்து கொண்டு சிராஜ் வரிசையாக வைட் யார்க்கர்களை வீசினார். 3 பந்துக்கு பின் இதை புரிந்து கொண்டு ரசல்.. கொஞ்சம் தள்ளி நின்று வைட் யார்க்கரை எதிர்கொள்ள முயன்றார்.

சிராஜ் சிறப்பு

சிராஜ் சிறப்பு

ஆனால் சிராஜ் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, அந்த பாலில் ஸ்லோ பவுன்சர் வீசினார். பின் மீண்டும் 5வது பந்தில் சிராஜ் வைட் யார்க்கர் வீசி குழம்பினார். முதல் 5 பந்தில் இதனால் ஒரு ரன் கூட செல்லவில்லை. அதிலும் இதில் 4 பந்துகள் 145+ கிமீ வேகத்தில் வந்தது. அதன்பின் கடைசி பந்தில் மட்டுமே 1 ரன் சென்றது. அதே ஓவரிலேயே சிராஜிடம் கொல்கத்தா அணி வீழ்ந்துவிட்டது. அந்த ஓவரில் சென்ற ரன் 000001 ஆகும்.

பெஸ்ட்

பெஸ்ட்

ஒரு காலத்தில் பெங்களூர் அணியில் ரன்களை வாரி வழங்கிய சிராஜ் மொத்தமாக தற்போது மாறியுள்ளார். பெங்களூர் அணியின் முக்கியமான டெத் ஓவர் பவுலராக சிராஜ் உருவெடுத்துள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பின் சிராஜ் மொத்தமாக புதிய பவுலராக உருவெடுத்துள்ளார். இதற்கு பின் முழுக்க முழுக்க கோலி கொடுத்த ஆதரவு மட்டுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 19, 2021, 10:27 [IST]
Other articles published on Apr 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+