Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி கிரிக்கெட்டே ஆட முடியாது என்றனர்.. நேற்று ஷமி வீசிய அந்த 4 ஓவர்கள்.. உறைய வைக்கும் கம்பேக்!

மும்பை: காயம் காரணமாக கடுமையாக அவதிப்பட்ட முகமது ஷமி நேற்று பஞ்சாப் அணிக்காக மிக சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளார்.

கடைசி நொடி வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் நேற்று ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் வெற்றிபெற்றது. 222 ரன்களை பஞ்சாப் இலக்காக நிர்ணயித்த நிலையில் 217 ரன்கள் வரை எடுத்து ராஜஸ்தான் கெத்து காட்டியது.

நேற்று பஞ்சாப் அணியின் பவுலிங் கடைசி கட்டத்தில் சிறப்பாக இருந்தது. முக்கியமாக ஷமி வீசிய ஓவரில் ரியான் பராக் அவுட் ஆனது ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

ஷமி

ஷமி

நேற்று ஷமி மற்ற பவுலர்களை விட சிறப்பாக பவுலிங் செய்து இருந்தார். இந்த ஐபிஎல் தொடருக்கு முன் ஷமி ஆஸ்திரேலிய தொடரில் காயம் அடைந்தார். பவுன்சர் பந்து ஒன்று பட்டதில் இவர் காயம் அடைந்தார். அதில் இவரின் பவுலிங் செய்யும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் 4- மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

கிரிக்கெட்

கிரிக்கெட்

அதோடு இனியும் ஷமி கிரிக்கெட் ஆடுவது கஷ்டம். அவருக்கு வயதாகிவிட்டது. அவருக்கு உடலில் ஏற்கனவே நிறைய காயம் இருக்கிறது. இந்த ஆஸ்திரேலிய தொடர்தான் அவருக்கு லாஸ்ட் என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

காயங்கள்

காயங்கள்

ஷமி உடல் முழுக்க பல இடங்களில் காயங்கள் உள்ளது. சில விபத்துகள் காரணமாக முதுகில் கூட எலும்புகள் முறிந்துள்ளன. ஏற்கனவே அவருக்கு இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இனி ஷமி ஆட முடியாது.. அவ்வளவுதான் அவரின் கதை க்ளோஸ் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

மீண்டு வருவார்

மீண்டு வருவார்

ஆனால் ஒவ்வொரு முறையும் இவர் காயம் அடைந்த பின் அதில் இருந்து வேகமாக மீண்டும் வந்து, மீண்டும் களமிறங்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த முறையும் கை எலும்பு முறிவில் இருந்து நினைத்ததை விட மீண்டு வந்தது, ஷமி மிக சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். ஷமி இவ்வளவு வேகமாக மீண்டு வருவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் யாருமே எதிர்பர்க்க்கவில்லை.

சிறப்பான கம்பேக்

சிறப்பான கம்பேக்

அதிலும் 4 ஓவர் போட்டு 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை ஷமி நேற்று எடுத்தார். நேற்று பவுலிங் செய்ததிலேயே பஞ்சாப் அணியில் நன்றாக வீசியது ஷமி மட்டும்தான். டி 20 உலகக் கோப்பை தொடரில் இவர் ஆடுவது சந்தேகம் என்று காயம் காரணமாக கருதப்பட்டது.

இந்திய அணி

இந்திய அணி

ஆனால் காயத்தை எல்லாம் தூக்கி வீசிவிட்டு.. அதிரடியான கம்பேக் கொடுத்து மீண்டும் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் ஷமி விரைவில் மீண்டும் இந்திய அணியில் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

Story first published: Tuesday, April 13, 2021, 18:11 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+