Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘அவுட் ஆஃப் தி பார்க்’.. முழுக்க முழுக்க சிக்ஸர் மட்டும்.. வெளுத்து வாங்கும் தோனி - வீடியோ!

துபாய்: ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே கேப்டன் தோனி, சிக்ஸர்கள் விளாசுவதற்காகவே ஸ்பெஷல் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வீடியோ வெளியாகியுள்ளது.

பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர், வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. முதல் சுற்று லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் 2வது சுற்று லீக் போட்டிகள் நடைபெறவேண்டியுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

அனைத்து அணிகளிலும் எந்தெந்த வீரர்கள் கலந்துக்கொள்வார்கள் என குழப்பம் நீடித்து வருகிறது. ஆனால் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் அனைத்து வீரர்களையும் மீண்டும் உறுதி செய்துள்ளது. எனவே முதல் பாதியில் இருந்த அதே உத்வேகத்தை 2வது பாதியிலும் காட்டும் முனைப்புடன் உள்ளது. அதற்கேற்றார் போல் ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அமீரகத்திற்கு சென்றுவிட்டது.

முதற்கட்ட பயிற்சி

முதற்கட்ட பயிற்சி

தோனி, ரெய்னா, உத்தப்பா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் சென்னையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தனி விமானம் மூலம் துபாய் சென்றடைந்தனர். அங்குள்ள தனியார் ஓட்டலில் 6 நாட்கள் குவாரண்டைனில் இருந்த அவர்கள் 2 கொரோனா பரிசோதனைகளுக்கு பிறகு தற்போது தான் தங்களது முதற்கட்ட பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். நேற்று அவர்கள் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதுமட்டுமல்லாமல் தோனி, ரெய்னா ஆகியோர் கால்பந்து விளையாடும் புகைப்படமும் வைரலானது. எனவே சிஎஸ்கே இந்த முறை அதிரடியுடன் கோப்பையை தட்டிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் கவலை

ரசிகர்களின் கவலை

சிஎஸ்கே அணியில் கடந்த முறை ருத்ராஜ், டூப்ளஸிஸ் முதல் ஜடேஜா வரை அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்ட போதும், ரசிகர்களுக்கு வருத்தம் இருந்துக் கொண்டே இருந்தது. அதற்கு காரணம் தோனியின் ஃபார்ம் தான். 6 - 7 வீரராக களமிறங்கும் எம்.எஸ்.தோனி கடைசி நேரத்தில் கூட அதிரடி காட்டாமல் இருக்கிறார். இதுவரை நடந்துள்ள 7 போட்டிகளில் தோனி 37 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். எனவே அவரின் பழைய அதிரடி ஆட்டத்தை காண முடியாமல் ரசிகர்கள் அதிருப்தியடைந்திருந்தனர்.

அதிரடி வீடியோ

இந்நிலையில் ரசிகர்களின் கவலை நீங்கியுள்ளது. துபாயில் கேப்டன் தோனி பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தோனி டிஃபன்ஸுக்காக பயிற்சி மேற்கொள்ளவில்லை. முழுவதுமாகவே அதிரடிக்காக மட்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். எனவே இந்த முறை தோனியிடம் இருந்து நிறைய அவுட் ஆஃப் தி பார்க் சிக்ஸர்களை எதிர்பார்க்கலாம்.

புள்ளிப்பட்டியல்

புள்ளிப்பட்டியல்

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி மற்றும் 2 போட்டிகளில் தோல்வியை பெற்றுள்ளது. இதன் மூலம் மொத்தம் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் உள்ளது. குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 22, 2021, 17:32 [IST]
Other articles published on Aug 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+