Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்வா? சாவா?.. இக்கட்டான சூழலில் ராஜஸ்தான் - மும்பை.. இன்று அனல்பறக்கும் ஆட்டம் உறுதி? காரணம் என்ன

அமீரகம்: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து ஒரு அணி வெளியேறவுள்ள முக்கிய போட்டி நடைபெறவுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்காக அனைத்து அணிகளும் கடுமையாக போராடி வருகிறது.

அந்தவகையில் இன்று 51வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இன்றைய போட்டி

இன்றைய போட்டி

இந்த போட்டி இரு அணிகளுக்குமே ஒரு வாழ்வா? சாவா போட்டி போன்று தான் பார்க்கப்படுகிறது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் 10 வெற்றிகள் பெற்று -0.453 நெட் ரன் ரேட்டுன் 7ஆவது இடத்தில் நீடிக்கிறது. இதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 12 புள்ள்ளிகளுடனும், -0.337 ரன் ரேட்டுடனும் 6வது இடத்தில் நீடிக்கிறது.

முக்கிய போட்டிகள்

முக்கிய போட்டிகள்

இரு அணிகளுக்குமே இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்றால் மட்டும் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் அந்த அணிகளால் நுழைய முடியும். ஒருவேளை ஒரு போட்டியில் தோற்றால் கூட தொடரில் இருந்து விலக வேண்டியது இருக்கும். அந்தவகையில் இன்று முதல் போட்டியாக இரு அணிகளும் மோதுகின்றன. அதுவும் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன.

ப்ளே ஆஃப் போட்டிகள்

ப்ளே ஆஃப் போட்டிகள்

ஏனென்றால் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் ரேஸில் உள்ளது. ஆனால் +0.294 என்ற அதிக ரன் ரேட்டுடன் உள்ளது. எனவே இதனை விட அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெறும் அணிதான் ப்ளே ஆஃப் செல்லும். அந்தவகையில் ராஜஸ்தான் அணி முழு பலத்துடன் உள்ளது. கடந்த போட்டியில் சிஎஸ்கே அணி நிர்ணயித்த 180+ ஸ்கோரை அசால்டாக துரத்தி ராஜஸ்தான் வெற்றி கண்டது. எனவே அதே நம்பிக்கையுடன் இன்று களமிறங்குகிறது.

மும்பையின் மோசமான ஃபார்ம்

மும்பையின் மோசமான ஃபார்ம்

ஆனால் மும்பை அணியின் நிலைமை தான் மோசமாக உள்ளது. அந்த அணியில் நட்சத்திர வீரர்களான ரோகித், டிகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் என பலரும் ஃபார்ம் அவுட்டில் உள்ளனர். இதே போல பும்ராவின் பந்துவீச்சும் பெரியளவில் எடுபடவில்லை. இதன் காரணமாக இன்றைய போட்டியில் மிகப்பெரும் திட்டத்துடன் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Story first published: Tuesday, October 5, 2021, 17:37 [IST]
Other articles published on Oct 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+