Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு ஓவர்.. மொத்தமாக சரிந்த மும்பை.. என்ன ஆனது சாம்பியன்ஸ் அணிக்கு? - எதிர்பார்க்காத டிவிஸ்ட்

சென்னை: டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் மிடில் ஆர்டர் மீண்டும் சொதப்பி உள்ளது.

டெல்லிக்கு மும்பைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை பிட்சில் சேஸிங் செய்வது கடினம் என்பதால் ரோஹித் மீண்டும் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

மும்பை பிட்ச் ஸ்பின் பவுலர்களுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இரண்டு அணியும் அதிக அளவில் ஸ்பின் பவுலர்களுடன் களமிறங்கி உள்ளது.

டெல்லி

டெல்லி

இந்த நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் மிடில் ஆர்டர் மீண்டும் சொதப்பி உள்ளது. மும்பை அணி என்றாலே வலுவான பேட்டிங் ஆர்டர் என்ற கருத்து நிலவி வரும் நிலையில் இந்த சீசனில் இதுவரை மும்பை அணியின் மிடில் ஆர்டர் சரியாக ஆடவில்லை. சூர்யா குமார் யாதவ் அவுட் ஆனால் கதை முடிந்தது என்ற நிலைதான் இருக்கிறது.

மும்பை

மும்பை

மும்பை அணியில் சூர்ய குமார் யாதவ் மட்டுமே தொடர்ந்து நன்றாக ஆடி வருகிறார். இவர் அவுட்டான பின் களமிறங்கும் இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, பொல்லார்ட் என்று யாருமே பெரிதாக ஆடுவது இல்லை. மும்பை பிட்சில் இவர்கள் கடந்த சீசன்களில் சிறப்பாக ஆடினார்கள்.

மூன்று போட்டி

மூன்று போட்டி

ஆனால் இந்த சீசனில் சென்னையில் நடந்த முதல் மூன்று போட்டியிலும் மும்பை அணியின் மிடில் ஆர்டர் சொதப்பி உள்ளது. டி காக் சொதப்பலாக ஆடினாலும் ரோஹித் சர்மா நல்ல தொடக்கம் கொடுப்பார், அதன்பின் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி அவுட் ஆன பின் வரிசையாக மும்பையின் மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை இழப்பதே தொடர் கதையாகி உள்ளது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

கடந்த போட்டியில் ரோஹித் சர்மாவே மும்பையின் மிடில் ஆர்டரை விமர்சிக்கும் அளவிற்கு சூழ்நிலை மோசமானது. வலுவான பேட்டிங் ஆர்டர் கொண்ட மும்பை இப்படி திணறுவது ஐபிஎல் உலகில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மிஸ்ரா

மிஸ்ரா

அதிலும் இன்று அமித் மிஸ்ரா வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து ரோஹித், ஹர்திக் அவுட் ஆனது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அந்த ஒரு ஓவரிலேயே மும்பை நிலைகுலைந்து போனது. இதுதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

அவுட்

அவுட்

மும்பை அணியில் டாப் ஆர்டர் மோசமாக ஆடி அவுட்டானாலும் கூட அந்த அணி கடைசி வரை போராடும். ஒரு வீரர் இருந்தால் கூட அணியை மீட்டு கொண்டு வருவார். அதுவே இத்தனை வருடம் மும்பை அணியின் அடையாளமாக இருந்தது. ஆனால் இப்போதோ மும்பை அணியில் ஓப்பனிங் வீரர்கள் அவுட்டானால் அடுத்தடுத்து வரிசையாக மிடில் ஆர்டர் வீரர்களும் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்கிறார்கள்.

Story first published: Tuesday, April 20, 2021, 21:08 [IST]
Other articles published on Apr 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+