Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஸ்டார்ட்ஸ்.. பயிற்சியை தொடங்கிய மும்பை - சிஎஸ்கே அணிகள்.. இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படங்கள்!

அபுதாபி: ஐபிஎல் தொடருக்காக இரு பெரும் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

ஐபிஎல் தொடரின் 2ம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் அங்கு நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான் மோதுகின்றன.

 ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை போன்று அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் என்பதால் ஐசிசி இந்த முடிவினை எடுத்துள்ளது. இந்த தொடரின் முதலாவது பாதியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் மும்பை அணியிடம் சிஎஸ்கே தோல்வியை தழுவியிருந்தது.

 முன்னேற்பாடுகள்

முன்னேற்பாடுகள்

இதற்காக பயிற்சிகளை மேற்கொள்ள சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் என 2 அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பியுள்ளன. சிஎஸ்கே துபாயில் உள்ள ஓட்டலிலும், மும்பை இந்தியன்ஸ் அணி அபுதாபியில் உள்ள ஓட்டலிலும் தங்கியுள்ளனர். அங்கு கடந்த 13ம் தேதி முதல் குவாரண்டைனில் இருந்த வீரர்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளில் நெகட்டீவ் என்ற முடிவை பெற்றுள்ளனர்.

பயிற்சி தொடங்கியது

பயிற்சி தொடங்கியது

இந்நிலையில் இரு அணிகளும் இன்று பயிற்சியை தொடங்கியுள்ளது. எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவருமே இன்று தங்களது முதற்கட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்த பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. இதில் சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி இருவரும் சேர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை அணி

மும்பை அணி

இதே போல மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் பயிற்சியை தொடங்கவுள்ளனர். கடந்த சில நாட்களாக ஓட்டலில் அவர்கள் ஜாலியாக நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என இருந்த வீடியோக்கள் வெளியானது. இந்நிலையில் இன்று பயிற்சிகள் தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், திட்டங்கள் ஏதும் இன்றி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Story first published: Friday, August 20, 2021, 15:55 [IST]
Other articles published on Aug 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+