இதோடு 3வது டைம்.. நம்பிக்கையை உடைத்துவிட்டார்.. கடுப்பாக்கிய மூத்த வீரர்.. தலையில் கை வைத்த ரோஹித்!
சென்னை: மும்பை அணியின் ஓப்பனிங் வீரர் டி காக் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சொதப்பி உள்ளார். இதனால் மும்பை அணி நிர்வாகம் அதிர்ச்சியில் உள்ளது.
மும்பைக்கும் டெல்லிக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் மும்பை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சென்னையில் சேஸ் செய்வது கஷ்டம் என்பதால் மும்பை முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில் இன்று ரோஹித் - டி காக் ஒப்பனர்களாக இறங்கினார்கள்.

டி காக்
கடந்த வருடம் மும்பை அணிக்காக டி காக் ஓப்பனிங் இறங்கினார். மும்பை அணியின் முக்கியமான வீரராக டி காக் திகழ்ந்தார். பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு டி காக் காரணமாக இருந்தார். இதனால் இந்த வருடமும் டி காக்கிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

முன்னுரிமை
மும்பை அணிக்காக முதல் போட்டியில் கிறிஸ் லின் சிறப்பாக ஆடினார். மும்பை அணிக்காக அதிரடியாக ஆடி கிறிஸ் லின் அரைசதம் அடித்தார். ஆனால் டி காக் வந்த பின் கிறிஸ் லின் நன்றாக ஆடியும் கூட அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

நீக்கம்
ஆனால் அணியில் வாய்ப்பு கிடைத்த பின் தொடர்ந்து மூன்று போட்டிகளாக டி காக் சொதப்பிக்கொண்டு இருக்கிறார். எந்த போட்டியிலும் 20 ரன்கள் கூட தாண்ட முடியாமல் டி காக் தொடர்ந்து சொதப்பி வருவது மும்பை அணியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முக்கியமாக சென்னை பிட்சில் இவரால் ஆட முடியவில்லை.

சென்னை பிட்ச்
சென்னை பிட்சில் ஸ்லோ பால்களை எதிர்கொள்ள முடியாமல் இவர் கடுமையாக திணறுகிறார். இன்று டி காக் 1 ரன்னுக்கு அவுட்டான பின் ரோஹித் சர்மா முகம் முழுக்க அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து மூன்று போட்டிகளாக சொதப்பி விட்டாரே என்று ரோஹித் சர்மா மிகவும் அதிர்ச்சியாக காணப்பட்டார். இதனால் அடுத்த போட்டியில் டி காக்கிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications