ரோகித் ரிட்டர்ன்ஸ்.. வலுவடைந்த மும்பை ப்ளேயிங் 11.. ஹர்திக் பாண்ட்யாவின் நிலை என்ன?
அமீரகம்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளேயிங் 11 தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 34 வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன
இந்த போட்டி இன்று இரவு அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.

முக்கிய ஆட்டம்
இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 4 தோல்விகளை சந்தித்துள்ளது. அதே போல கொல்கத்தா அணியும் 8 போட்டிகளில் விளையாடி 5 தோல்விகளை சந்தித்துள்ளது. எனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக இரு அணிகளும் முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு
இந்நிலையில் இந்த போட்டிக்கான மும்பை அணியின் ப்ளேயிங் 11 குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் ரோகித் சர்மா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது. ஆனால் இன்றைய போட்டியில் ரோகித் மற்றும் பாண்டியா ஆகியோர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணிக்கு கூடுதல் பலம்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக அமீரகம் வந்த ரோகித் சர்மாவுக்கு ஒரு போட்டியில் ஓய்வு தேவைப்பட்டது. எனவே அவர் கடந்த போட்டியில் உட்காரவைக்கப்பட்டார். இதே போல ஹர்திக் பாண்ட்யாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தது. அது தற்போது சரியாகி இருப்பதால் இருவருமே இன்றைய போட்டியில் களம் காணுவார்கள் எனக்கூறப்படுகிறது.

ப்ளேயிங் 11 விவரம்
ரோஹித் சர்மா, குயின்டன் டிகாக், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், க்ருணால் பாண்டியா, பொல்லார்டு, ஹார்திக் பாண்ட்யா, ராகுல் சாகர், பும்ரா, ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே


Click it and Unblock the Notifications