Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 பேருக்காக தனி விமானம்.. செல்வாக்கில் கெத்து காட்டும் மும்பை அணி.. அமீரகம் சென்றடைந்த வீரர்கள்!

அபுதாபி: இங்கிலாந்தில் இருந்து மும்பை இந்தியன்ஸை சேர்ந்த வீரர்கள் மட்டும் ஸ்பெஷல் விமானம் மூலம் அமீரகம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் அதிகமானதால் போட்டி ரத்தானது.

இதனையடுத்து இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்கள், ஐபிஎல் தொடருக்காக கிளம்ப தயாராகி வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

தடைபட்டுள்ள 14வது ஐபிஎல் தொடர் ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மீதமுள்ள 31 போட்டிகளை 27 நாட்களுக்குள் முடித்துவிட பிசிசிஐ அட்டவணை தயார் செய்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது அணியுடன் அமீரகத்தில் இணைந்துவிட்டனர். அயல்நாட்டில் இருக்கும் இந்திய வீரர்களும் தற்போது கிளம்பிவிட்டனர்.

அமீரகம் பறந்த வீரர்கள்

அமீரகம் பறந்த வீரர்கள்

அதன்படி முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அமீரகம் சென்றடைந்தனர். நேற்று டெஸ்ட் தொடர் முடிவுற்ற நிலையில் மும்பை அணி நிர்வாகம் உடனடியாக தனி விமானம் ஒன்றை இங்கிலாந்துக்கு அனுப்பி 3 வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளது.

 பரிசோதனை முடிவுகள்

பரிசோதனை முடிவுகள்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து அவர்கள் புறப்படுவதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனைகள் மெற்கொள்ளப்பட்டதில் நெகட்டீவ் என முடிவு வந்துள்ளது. அதே போல இன்று அபுதாபிக்கு சென்றடைந்தவுடன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளிலும் அனைவருக்கும் நெகட்டீவ் என முடிவு வந்துள்ளாது. இதனால் அவர்கள் அணி இருக்கும் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குவாரண்டைன்

குவாரண்டைன்

இங்கிலாந்து தொடரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், பபுள் டூ பபுள் மாற்றத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே அமீரகம் சென்றடைந்துள்ள மும்பை அணி வீரர்கள் 3 பேரும் தங்களது குடும்பத்தினருடன் 6 நாட்கள் குவாரண்டைனில் இருக்கவுள்ளனர். அதில் 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு மூன்றிலும் நெகட்டீவ் என முடிவு வந்தால் மட்டுமே அணியுடன் இணைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பலமான அணி

பலமான அணி

மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம் போல இந்தாண்டு ஐபிஎல் தொடரிலும் வலுவான நிலையில் உள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 7 போட்டிகளில் அந்த அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 11, 2021, 19:54 [IST]
Other articles published on Sep 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+