Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘யப்பா..சொர்கம் போன்ற வசதிகள்’.. மும்பை அணியினர் தங்கியிருக்கும் ஓட்டல்.. அறைகளில் உள்ள வசதிகள் என்ன

அபுதாபி: ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள மும்பை அணி வீரர்களுக்கு வேற லெவலில் வசதிகளை செய்து கொடுத்துள்ளது அணி நிர்வாகம்.

ஐபிஎல் தொடரின் 2ம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் அங்கு நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான் மோதுகின்றன.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை போன்று அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் என்பதால் ஐசிசி இந்த முடிவினை எடுத்துள்ளது. இந்த தொடரின் முதலாவது பாதியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் மும்பை அணியிடம் சிஎஸ்கே தோல்வியை தழுவியிருந்தது.

முன்னேற்பாடுகள்

முன்னேற்பாடுகள்

இதற்காக பயிற்சிகளை மேற்கொள்ள சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் என 2 அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பியுள்ளன. சிஎஸ்கே துபாயில் உள்ள ஓட்டலிலும், மும்பை இந்தியன்ஸ் அணி அபுதாபியில் உள்ள ஓட்டலிலும் தங்கியுள்ளனர். அங்கு கடந்த 13ம் தேதி முதல் குவாரண்டைனில் இருந்த வீரர்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளில் நெகட்டீவ் என்ற முடிவை பெற்றுள்ளனர்.

பயிற்சி தொடங்கியது

பயிற்சி தொடங்கியது

இதனையடுத்து இரு அணிகளும் இன்று பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓட்டல் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவற்றின் விலை, ஓட்டலில் உள்ள வசதிகள் ஆகியவை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓட்டலில் உள்ள வசதிகள்

ஓட்டலில் உள்ள வசதிகள்

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் தற்போது அபுதாபியில் உள்ள st, Regis saadiyat island Resort ல் தங்கியுள்ளனர். இந்த ஓட்டலில் மொத்தம் 312 அறைகளும், 64 சூட் ரூம்களும், 14 ஆலோசனைக் கூடங்களும் உள்ளன. மொத்தம் 8 மாடிகளை கொண்டதாகும். இந்த ஓட்டலில் தங்க குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ரூ.25,000 வாடகை ஆகும். இதில் விளையாட்டு கிளப்புகள், ப்ரைவேட் கடற்கரை, நீச்சல் குளங்கள், கடற்கரையில் அமர்ந்து உணவு அருந்தும்படியான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படிபட்ட இந்த ஓட்டலில் தான் அடுத்த 2 மாதங்களுக்கு மும்பை வீரர்கள் தங்கவுள்ளனர்.

கூடுதல் ஏற்பாடுகள்

கூடுதல் ஏற்பாடுகள்

இதுமட்டுமல்லாமல் ஓட்டலில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சார்பிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள ஒரு அறையில் மினி தியேட்டர் ஒன்றை ஏற்பாடு செய்து வீரர்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்க சோஃபாக்களும் போடப்பட்டுள்ளது. இசைக்கருவிகளுடன் கச்சேரி நடத்துவதற்கு தனி அரங்கமே ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடும் பொழுதுபோக்கு பூங்காக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வீரர்கள் தங்களது மனைவி குழந்தைகளுடன் மாலை நேரத்தை செலவிடுகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் டேபிள் டென்னிஸ், வீடியோ கேம் என வீரர்களுக்கும் பல்வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வியந்துப்போன ரசிகர்கள்

வியந்துப்போன ரசிகர்கள்

ரசிகர்கள் அனைவரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சொகுசான ஏற்பாடுகளுடன் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயோ பபுள் பாதுகப்புடன் இருக்க வேண்டும் என்பதால் ஓட்டலின் ஒரு பகுதியையே வாடகைக்கு எடுத்துவிட்டதாகவும் தெரிகிறது. எது எப்படியோ 6வது முறையாக கோப்பையை இந்தாண்டு வெல்லுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Sunday, August 22, 2021, 20:35 [IST]
Other articles published on Aug 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+