Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.... ரோகித் கொடுத்த சர்ப்ரைஸ்...சென்னை ரசிகர்களை கவர மும்பை புது திட்டம்!

சென்னை : மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா, சென்னை ரசிகர்களை கவர வித்தியாசமான முயற்சியை செய்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்காக இரு அணிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். வந்தவுடன் அவர்கள் செய்துள்ள விஷயம் பலரையும் கவர்ந்துள்ளது.

மும்பை அணி

மும்பை அணி

ஐபிஎல்-ல் 5 முறை கோப்பை வென்ற ஒரே அணி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகும். ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி வழக்கமாக முதலில் சொதப்பிவிட்டு பின்னர் கம்பேக் கொடுத்து ஆச்சரியமளிக்கும். ஆனால் கடந்த சீசனில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. அதே போல இந்தாண்டும் தொடக்கம் முதலே வெற்றி முகம் காண அந்த அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

ஆல் செட்

ஆல் செட்

ஆல் செட் இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்களான ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான் உள்ளிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர். இந்த அணிக்கு முதல் 5 போட்டிகள் சென்னையில் தான் நடைபெறவுள்ளது.

ரோகித் டயலாக்

இந்நிலையில் அதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாத்தி கம்மிங் பாடலுடன் மும்பை வீரர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். மேலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தமிழில், வணக்கம் சென்னை நாங்க இங்க வந்துட்டோம் என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைராகி வருகிறது.

திட்டம்

அதே போல சென்னை ரசிகர்களை கவர புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ரோகித் சர்மா, உங்கள் அன்பும் பாசமும், எங்கள் பலம் என்றும் இஷான் கிஷான், எங்கள் MI ஃபேமிலி எல்லா இந்தியர்களின் ஃபேமிலி என தமிழில் பேசியுள்ளனர். அதே போல வீடியோவில் வணக்கம் சென்னை, ஆட்டத்தை ஆரம்பிப்போமா? என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 போட்டி விவரம்

போட்டி விவரம்

சென்னை சிதம்பரம் மைதானத்தில் மும்பை அணி 5 போட்டிகளில் ஆடவுள்ளது. தனது முதல் போட்டியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதற்கு அடுத்து, ஏப்.13 கொல்கத்தா அணியுடனும், ஏப்.17 ஐதராபாத் அணியுடனும், ஏப். 20 டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ஏப். 23ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.

Story first published: Thursday, April 1, 2021, 15:32 [IST]
Other articles published on Apr 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+