Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘கொஞ்சம் கஷ்டம்தான்’.. மும்பை - ராஜஸ்தானின் வாழ்வா? சாவா? ஆட்டம்.. அசரவைக்கும் புள்ளிவிவரங்கள்!

சார்ஜா: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை கூட கணிக்க முடியாத அளவிற்கு இரு அணிகளும் சம பலத்துடன் கடந்த காலங்களில் விளையாடியுள்ளனர்.

14வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ப்ளே ஆஃப் சுற்றும் நெருங்கி வருகிறது.

ஏற்கனவே சிஎஸ்கே, டெல்லி, ஆர்சிபி அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிட்ட நிலையில் 4வது இடத்திற்கு மட்டும் 4 அணிகள் மோதி வருகின்றன.

முக்கியமான ஆட்டம்

முக்கியமான ஆட்டம்

அந்தவகையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வாழ்வா சாவா போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 10 புள்ளிகளை பெற்றுள்ளனர். எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிதான் ப்ளே ஆஃப் ரேஸில் நீடிக்கும். தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். எனவே இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

முக்கியமான ஆட்டம்

முக்கியமான ஆட்டம்

அந்தவகையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வாழ்வா சாவா போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 10 புள்ளிகளை பெற்றுள்ளனர். எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிதான் ப்ளே ஆஃப் ரேஸில் நீடிக்கும். தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். எனவே இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அணிகளின் பலம்

அணிகளின் பலம்

பலத்தை வைத்து பார்க்கும் போது ராஜஸ்தான் அணி கடந்த போட்டியில் சக்தி வாய்ந்த சிஎஸ்கே அணியையே சுலபமாக வீழ்த்திவிட்டு நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. மும்பை அணியோ, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்றுவிட்டு தோற்றது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற படு தீவிரமாக தயாராகி வருகிறது.

பழிதீர்க்குமா ராஜஸ்தான்

பழிதீர்க்குமா ராஜஸ்தான்

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னர் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியிருந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 171/4 ரன்கள் அடித்தது. இதன் பின்னர் ஆடிய மும்பை 9 பந்துகள் மீதம் இருக்கவே ஆட்டத்தை வென்றுவிட்டது. இதில் குயிண்டன் டிகாக் 70 ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவியிருந்தார்.

அமீரக புள்ளிவிவரங்கள்

அமீரக புள்ளிவிவரங்கள்

கடந்தகால புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போதும் இரு அணிகளும் சமபலத்துடனே உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதியது. இதில் ஒரு முறை மும்பை அணியும், ஒரு முறை ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்று கணக்கை தீர்த்துக்கொண்டது.

ஐபிஎல் வரலாறு

ஐபிஎல் வரலாறு

இதே போல இதுவரை ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் மும்பை - ராஜஸ்தான் அணி 26 முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 13 முறையும் வெற்றிகளை பெற்றுள்ளன. ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் முடிவு எட்டப்படவில்லை. இப்படி இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. எது எப்படியிருந்தாலும் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, October 5, 2021, 18:06 [IST]
Other articles published on Oct 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+