தோனியே இதை எதிர்பார்க்கல.. சிஎஸ்கேவின் அஸ்திரத்தை சென்னையிலேயே களமிறக்கும் ரோஹித்.. செம டிவிஸ்ட்
சென்னை: சிஎஸ்கேவின் முக்கியமான அஸ்திரம் ஒன்றை 2021 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களமிறக்க போகிறார் என்று கூறுகிறார்கள்.
2021 ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான ஆட்டம் நாளை நடக்க உள்ளது. பெங்களூர் அணிக்கும் மும்பை அணிக்கும் இடையிலான முதல் ஐபிஎல் போட்டி நாளை நடக்க உள்ளது.
இதில் பெங்களூர் அணி மேக்ஸ்வெல், கைலி ஜேமிசன் , கேன் ரிச்சர்ட்ஸன் போன்ற புதிய வீரர்களுடன் களமிறங்குகிறது. மும்பை அணியும் தங்கள் அணியில் பெரிய மாற்றம் செய்யாமல் களமிறங்க போகிறது.

சென்னை
இந்த போட்டி சென்னையில் நடக்க உள்ளது. சென்னையில்தான் மும்பை அணி சில முக்கியமான லீக் போட்டிகளையே ஆட உள்ளது. சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்ற பிட்ச் ஆகும்.

பிட்ச்
இதனால் சென்னை பிட்சில் மும்பை அணி எப்படி ஆடும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மும்பை அணியில் பெரிய அளவில் கடந்த சீசனில் முழு நேர ஸ்பின் பவுலர்கள் இல்லை. ராகுல் சாகர் அவ்வளவு சிறப்பாக ஸ்பின் பவுலிங் செய்யவில்லை.

பாண்டியா
அதேபோல் குர்னால் பாண்டியாவும் அவ்வளவு அற்புதமாக பவுலிங் செய்யவில்லை. இந்த நிலையில்தான் சென்னையில் மும்பை அணி பியூஸ் சாவ்லாவை களமிறக்கும் என்று கூறுகிறார்கள். சென்னையில் நடக்கும் போட்டிகளில் முன்னாள் சிஎஸ்கே வீரர் சாவ்லாவை ரோஹித் களமிறக்குவார் என்கிறார்கள்.

சென்னை பிட்ச்
சென்னை பிட்சில் இவர் நன்றாக பவுலிங் செய்வார். இதனால்தான் இவரை தோனி அணியில் எடுத்தார் . ஆனால் கடந்த சீசன் சென்னையில் நடக்கவில்லை. இந்த நிலையில் மும்பை அணி தற்போது சென்னையின் அஸ்திரத்தை சென்னை மண்ணிலேயே களமிறக்க உள்ளது.

சென்னை
இது மும்பை அணிக்கு ஆதரவாக மாற போகிறது. இவரை மும்பை அணி ஏலம் எடுத்த போது இப்படி ஒரு டிவிஸ்ட் வரும் என்று தோனியே எதிர்பார்த்து இருக்க மாட்டார்.ஆனால் பியூஸ் சாவ்லா தேர்வு மும்பை அணிக்கு சாதகமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications